ஆப்கானிஸ்தான் வீரர்களின் 10 விக்கெட்டுகளையும் அள்ளிய 140 கிலோ எடையுள்ள கார்ன்வால்!
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 187 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் சிறப்பாக பந்து வீசிய ரக்கீம் கார்ன்வால், 25.3 ஓவர்களில் 5 மெய்டன்கள், 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை எடுத்திருந்தது. இதன்மூலம் 90 ரன்கள் முன்னிலை பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக கேம்பெல் 55 ரன்களும், ஷமர் ப்ரூக்ஸ் 111 ரன்களை எடுத்திருந்தனர்.

2வது இன்னிங்க்ஸை துவங்கிய ஆப்கானிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவுகள் வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 120 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
2-வது இன்னிங்ஸில் மே.இ.தீவுகள் தரப்பில் கார்ன்வால், ஹோல்டர், சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து கார்ன்வால் மட்டும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதையடுத்து, 31 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இன்று காலை இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 1 விக்கெட்டை மட்டுமே பறிகொடுத்து அபார வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ராகீம் கார்ன்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் வீரர்களின் 10 விக்கெட்டுகளையும் அள்ளிய 140 கிலோ எடையுள்ள கார்ன்வால்!
Reviewed by Author
on
November 29, 2019
Rating:
No comments:
Post a Comment