130 பேரை பலிகொண்ட பாரீஸ் தீவிரவாத தாக்குதல்கள்: 20பேர் மீது விசாரணை நடத்த முடிவு!
நான்கு ஆண்டுகளுக்கு முன் பாரீசில் மனித வெடிகுண்டுகள் மூலம் 130 பேரை பலிகொண்ட வழக்கில் 20 சந்தேகத்துக்குரிய நபர்களை விசாரிக்க பிரான்ஸ் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர்களில் 14 பேர் ஏற்கனவே காவலில் இருக்கிறார்கள். மனித வெடிகுண்டாக செயல்பட்டவர்களில் உயிருடன் சிக்கிய Salah Abdeslam-ம் இதில் அடங்குவார்.அதுபோக, ஆறு பேர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவர்களில் ஐ.எஸ் அமைப்பின் பிரச்சார பீரங்கிகளாக திகழும் Fabien மற்றும் Jean-Michel Clain ஆகியோரும் அடங்குவர்.
ஆனால் இந்த சகோதரர்கள் இருவரும் சிரியாவில் வான் வெளித்தாக்குதல் ஒன்றின்போது கொல்லப்பட்டுவிட்டதாக ஐ.எஸ் ஒன்லைன் பத்திரிகை ஒன்று தெரிவித்திருந்தது. இந்த விசாரணை 2021ஆம் ஆண்டு பாரீசில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி, கால் பந்து விளையாட்டுப்போட்டி ஒன்றின்போது ஆயுதம் தரித்த 10 பேர் விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு வெளியிலும், பின்னர் பார்கள் மற்றும் உணவகங்களிலும் நடத்திய தாக்குதல்களின்போது 130 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
130 பேரை பலிகொண்ட பாரீஸ் தீவிரவாத தாக்குதல்கள்: 20பேர் மீது விசாரணை நடத்த முடிவு!
Reviewed by Author
on
November 29, 2019
Rating:

No comments:
Post a Comment