புத்தளத்தில் இருந்து வாக்களிக்க வாக்காளர்களுடன் மன்னார் நோக்கி வந்த பேரூந்துகள் மீது துப்பாக்கி பிரையேகம்-10 பேரூந்துகளில் வந்தவர்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பு- சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக்
இன்று சனிக்கிழமை16/11/2019 நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மன்னாரில் வாக்களிப்பதற்காக மன்னாரைச் சேர்ந்த வாக்காளர்கள் புத்தளத்திலிருந்து நெச்சியகாம ஒயாமடு வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரையோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ஹீனைஸ் பாரூக் தெரிவித்தார்.
-இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
புத்தளத்தில் உள்ள மன்னார் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு புத்தளத்தில் இருந்து பேரூந்துகள் மூலம் மன்னாரிற்கு வருகை தந்தனர்.
இதன் போது புத்தளத்திலிருந்து நெச்சியகாம ஒயாமடு வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை மீது கற்களைக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, துப்பாக்கி பிரையோகமும் மேற்கொள்ளப்பட்டது.
எனினும்; இத்தாக்குதலில் எவ்வித உயிர் சோதங்களின்றி சாரதியின் சாதுரியத்தால் பாதுகாக்கப்பட்டு முன்னோரி வரும்போது பலதடைகள் ஏற்பட்டது. எனினும் பேரூந்து செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. .
அதனை தொடர்ந்து மேலும் தொடராக பயணித்த ஏழு பஸ்களை பாரிய மரங்களைக் கொண்டு பயணத்தடைகள் ஏற்பாடுத்தப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடைகள் இடப்பட்ட மரங்களை பொலீசார் மக்களின் உதவியோடு அகற்றப்பட்டு மக்கள் பாதுகாப்பாக மன்னார் பிரதான வீதிக்கு அனுப்பட்டனர்.
மேலும் இச்சம்பவத்தில் சேதமாக்கப்பட்ட மூன்று பஸ்கள் வவுனியா மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் முறைப்பாடு பாதிவு செய்யப்பட்ட பின் குறித்த பேரூந்துகள் விடுவிக்கப்பட்டது.குறித்த மக்கள் பாதுகாப்பாக மன்னார் வந்துள்ளனர்.10 பேரூந்துகளில் பயணித்த மக்களே அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.ஏனைய பேரூந்துகளில் வந்த மக்கள் பாதுகாப்பாக வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
புத்தளத்தில் உள்ள மன்னார் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு புத்தளத்தில் இருந்து பேரூந்துகள் மூலம் மன்னாரிற்கு வருகை தந்தனர்.
இதன் போது புத்தளத்திலிருந்து நெச்சியகாம ஒயாமடு வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை மீது கற்களைக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, துப்பாக்கி பிரையோகமும் மேற்கொள்ளப்பட்டது.
எனினும்; இத்தாக்குதலில் எவ்வித உயிர் சோதங்களின்றி சாரதியின் சாதுரியத்தால் பாதுகாக்கப்பட்டு முன்னோரி வரும்போது பலதடைகள் ஏற்பட்டது. எனினும் பேரூந்து செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. .
அதனை தொடர்ந்து மேலும் தொடராக பயணித்த ஏழு பஸ்களை பாரிய மரங்களைக் கொண்டு பயணத்தடைகள் ஏற்பாடுத்தப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடைகள் இடப்பட்ட மரங்களை பொலீசார் மக்களின் உதவியோடு அகற்றப்பட்டு மக்கள் பாதுகாப்பாக மன்னார் பிரதான வீதிக்கு அனுப்பட்டனர்.
மேலும் இச்சம்பவத்தில் சேதமாக்கப்பட்ட மூன்று பஸ்கள் வவுனியா மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் முறைப்பாடு பாதிவு செய்யப்பட்ட பின் குறித்த பேரூந்துகள் விடுவிக்கப்பட்டது.குறித்த மக்கள் பாதுகாப்பாக மன்னார் வந்துள்ளனர்.10 பேரூந்துகளில் பயணித்த மக்களே அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.ஏனைய பேரூந்துகளில் வந்த மக்கள் பாதுகாப்பாக வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புத்தளத்தில் இருந்து வாக்களிக்க வாக்காளர்களுடன் மன்னார் நோக்கி வந்த பேரூந்துகள் மீது துப்பாக்கி பிரையேகம்-10 பேரூந்துகளில் வந்தவர்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பு- சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக்
Reviewed by Author
on
November 16, 2019
Rating:

No comments:
Post a Comment