உலக சாதனை படைத்த அஸ்வின் -
இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை சொந்த மண்ணில் 249 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அஸ்வின், இப்போட்டியில் வங்கதேச அணித்தலைவர் மொமினும் ஹக் விக்கெட்டை வீழ்த்திய போது சாதனை படைத்தார்.
மேலும், முதல் நாள் ஆட்டத்தில் மக்மதுல்லா விக்கெட்டையும் வீழ்த்தி, வங்கதேச அணியின் முதல் இன்னிங்க்ஸில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
தற்போது சொந்த மண்ணில் 251 டெஸ்ட் விக்கெட்களை வைத்துள்ள அஸ்வின் ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே வரிசையில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் மிக விரைவாக 250 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முத்தையா முரளிதனுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார், இருவரும் 42 போட்டிகளில் இச்சாதனை புரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உலக சாதனை படைத்த அஸ்வின் -
Reviewed by Author
on
November 16, 2019
Rating:

No comments:
Post a Comment