டெங்கு அபாயம்:வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி இன்று மூடல் -
பாடசாலை வளாகத்தில் டெங்கு அபாய நிலை காணப்படுவதனால் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படுவதாக வவுனியா தெற்கு வலயகல்விப் பணிப்பாளர் முத்து இராதகிருஸ்ணன் தெரிவுத்துள்ளார்.
குறித்த பாடசாலையில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து உடனடியாக பாடசாலையை சுத்தம் செய்யுமாறு சுகாதார பணிமனையினரால் குறித்த பாடசாலைக்கு கடிதம் மூலம் இன்று மாலை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளைய தினம் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படுவதுடன், சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களின் மாகாண ரீதியான இன்று பரீட்சைகளை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா தெற்கு கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
டெங்கு அபாயம்:வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி இன்று மூடல் -
Reviewed by Author
on
November 14, 2019
Rating:

No comments:
Post a Comment