TEACHER SUPPER LEAGE சுற்றுப்போட்டி மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை வெற்றி வாகை சூடியது.
மன்னார் தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கிடையிலான கிறிக்கெற் TEACHER SUPPER LEAGE சுற்றுப்போட்டியானது மன்.சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் ஆசிரியர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு மழைகாரணமாக தாமதமாகி முழுமையான தொடராக நிறைவு பெற்றுள்ளது.
பங்கு பற்றிய தேசிய பாடசாலை ஆசிரியர் அணி விபரம்
மன்.சித்திவிநாயகர் இந்த்துக்கல்லூரி
மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை
மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை
மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை
இந்த நான்கு பாடசாலை அணிகளுக்கும் தலா இரண்டு சுற்றுக்கள் வீதம் போட்டிகள் நடைபெற்று அதிகூடிய புள்ளிகள் பெற்ற இரண்டு பாடசாலைகளான
மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை
மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை இடையிலான இறுதிப்போட்டி யானது 20/11/2019 புதன்கிழமை மாலை 3-30 மணிக்கு மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அணி துடுப்பெடுத்தாடியது. (10 over) பத்து பந்துகள் பரிமாற்றம் நிறைவில் முழுமையாக 68 ஓட்டங்களைபெற்றுக்கொண்டனர். 69 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை அணி 6.4 ஓவர்கள் நிறைவில் 01 இலக்கை மாத்திரம் இழந்து 69 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியது.
போட்டி தொடரின்.......
- ஆட்ட நாயகனாக M.துசீலன் அணித்தலைவர் மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை ஆசிரியர் அணி
- சிறந்த துடுப்பாட்ட வீரராக .J.ஜோண்சன் மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆசிரியர் அணி
- சிறந்த பந்துவீச்சாளராக திருR.பிரணவன் மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை ஆசிரியர் அணி
- சிறந்த சகலதுறை வீரராக திரு.V.கோகுலன் மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை ஆசிரியர் அணி தமது திறமையினை வெளிப்படுத்தினர். இச்சுற்றுப்போட்டியில் வெற்றி வாகை சூடிய மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை ஆசிரியர் அணிக்கும் திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வாறான போட்டிகள் மூலம் ஆசிரியர்கள் வெறும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தவிர்ந்து ஏனைய தமது இதர செயற்பாடுகளில் திறமையினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
TEACHER SUPPER LEAGE சுற்றுப்போட்டி மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை வெற்றி வாகை சூடியது.
Reviewed by Author
on
November 22, 2019
Rating:

No comments:
Post a Comment