பிரான்சில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்
பிரான்ஸ் நாட்டில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந்த மாவீரர் அஞ்சலி நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் விடுதலை புலிகளின் தலைவரின் உரை திரையில் திரையிடப்பட்டது.
ஈழத் தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடாத்தும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் ஈழ விடுதலை செயற்பாட்டாளர்களும், நாட்டு பற்றாளர்களும் கலந்து கொண்டனர சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தாங்கள் உணர்வுகளை இன்று இந்த மாவீரர் நிகழ்வுகளை நடத்தி தாங்கள் வாழும் நாடுகளில் இருந்தவாறே வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரான்சில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்
Reviewed by Author
on
November 28, 2019
Rating:

No comments:
Post a Comment