இலங்கை ஜனாதிபதி தேர்தலின் வெற்றியாளர் கோத்தபாய ராஜபக்ச! உத்தியோகபூர்வ அறிவிப்பு -
2019ஆம் ஆண்டிற்கான இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடத்தப்பட்டு வரும் ஊடக சந்திப்பில் வைத்து சற்று முன்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
அத்துடன்,
இந்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச 6 924 255 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 5 564 239 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 418 553 வாக்குகளையும் பெற்றுள்ளதாக இதன்போது கூறப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி தேர்தலின் வெற்றியாளர் கோத்தபாய ராஜபக்ச! உத்தியோகபூர்வ அறிவிப்பு -
Reviewed by Author
on
November 17, 2019
Rating:

No comments:
Post a Comment