கோத்தபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வினை நிராகரிக்கும் கூட்டமைப்பு? -
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்சஇன்று சத்தியபிரமாணம் செய்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் ஜயசிறி மகாபோதியில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இதில் கலந்துக்கொள்வதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற செயலாளர் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், கோத்தபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டடைப்பின் உறுப்பினர்கள் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களாக கோத்தபாய ராஜபக்சவினை கடுமையாக விமர்சித்து வந்த தமிழ்த் தேசிய கூட்டடைப்பு மற்றும் இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகள் ஆகியோர் பதவியேற்பு நிகழ்வினை நிராகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோத்தபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வினை நிராகரிக்கும் கூட்டமைப்பு? -
Reviewed by Author
on
November 18, 2019
Rating:

No comments:
Post a Comment