நுரையீரல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள்: அவசியம் அறிந்துகொள்ளுங்கள் -
இவற்றில் நுரையீரல் புற்றுநோய் ஆனது மிகவும் கொடியதாகும்.
இதனை ஆரம்பகாலங்களில் கண்டறிவதன் மூலம் மேலும் பரவுவதை தடுக்க முடியும். பின்வரும் அறிகுறைகளை வைத்து இந்நோயை இனங்காண முடியும்.
நீண்டநாள் இருமல்
இருமலானது காய்ச்சல் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்கள் என்பவற்றினாலும் ஏற்படக்கூடியது.எனினும் இது ஒரு வாரம் அளவிற்கே நீடிக்கும்.
ஒரு வாரத்திற்கும் மேலாக இருமல் நீடித்தால் அது நுரையீரல் புற்றுநோய்க்கு அறிகுறியாகும்.
மூச்சுவிட சிரமப்படுதல்
நடக்கும்போதோ, கதைக்கும்போதோ அல்லது சாதாரண வேலைகளை செய்யும்போதோ திடீரென மூச்சுவிட சிரமப்படும் நிலையை உணர்ந்தால் அது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.எலும்பு வலி காணப்படுதல்
நுரையீரல் புற்றுநோயானது எலும்புகளுக்கும் பரவும் ஆற்றல் உடையது.எனவே உடலின் பின்புறமாக உள்ள எலும்புகளிலோ அல்லது ஏனைய பகுதிகளில் உள்ள எலும்புகளிலே வலி உணரப்பட்டால் அதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.
எனினும் அனேகமானவர்களால் எலும்பு வலிகளையும், தசைகளில் ஏற்படுகின்ற வலியையும் வேறுபிரித்து அறிய முடியாமல் இருக்கும்.
எலும்புவலியானது இரவில் கடுமையானதாகவும், அசையும்போது வலி அதிகரிக்கக்கூடியதாகவும் இருப்பதை கொண்டு வேறுபடுத்தி அறியலாம்.
உடல் எடை குறைதல்
நுரையீரல் புற்றுநோய்க்கு மாத்திரமன்றி ஏனைய புற்றுநோய்களுக்கும் உடல் எடை குறைவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.புற்றுநோய் கலங்கள் உருவாகும்போது உடல் எடையில் சடுதியான குறைவு ஏற்படும்.
உடல் எடை குறைவதற்கான எம் முயற்சியும் மேற்கொள்ளாதபோது மாதம் 5 கிலோ கிராம்கள் வரை எடை குறைந்தால் அதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.
இந்த அறிகுறிகளை வைத்து வைத்தியரின் உதவியை முற்கூட்டியே நாடுதல் சிறந்ததாகும்.
நுரையீரல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள்: அவசியம் அறிந்துகொள்ளுங்கள் -
Reviewed by Author
on
November 06, 2019
Rating:

No comments:
Post a Comment