அகதி ஒருவரை நாடுகடத்த சுவிட்சர்லாந்துக்கு தடை விதித்துள்ள ஐரோப்பிய நீதிமன்றம்! -
சுமார் 20 வயதுள்ள அந்த நபர், 2014ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு வந்து, தான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளதாலும், ஆப்கானிஸ்தானில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையை கருத்தில் கொண்டும், தனக்கு புகலிடம் அளிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
மாகாண புலம்பெயர்தல் அலுவலகம் (SEM) அவரது கோரிக்கையை நிராகரித்து விட, ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் பெரிய அளவில் ஒன்றும் துன்புறுத்தப்படமாட்டார் என்று கூறி, சுவிஸ் நீதிமன்றம் ஒன்றும் அந்த முடிவை ஆதரித்தது.
அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கான காரணங்கள் உண்மையானவை என்பது தெரியவந்தும், அவர் மதம் மாறியது அவரது உறவினர்களுக்கு தெரியாது என்றும், எனவே அவர் நாடு திரும்பினால் பாதுகாப்பு பிரச்னை ஒன்றும் இருக்காது என்றும் சுவிஸ் நீதிமன்றம் கூறிவிட்டது.
ஆனால், நேற்று, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம், அவரை திரும்ப ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவது மனித உரிமைகள் மீதான ஐரோப்பிய கன்வெஷனை மீறுவதாகும் என்று கூறி அவரை நாடு கடத்தக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதை ஏராளமான சாட்சியங்களும் ஆவணங்களும் காட்டுவதாக தெரிவித்துள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம், சுவிஸ் நீதிமன்றம் அந்த நபர் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படுவதால் என்னென்ன விளைவுகள் நேரிடும் என்பதை போதுமான அளவு தெளிவாக அறிந்துகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது.
அகதி ஒருவரை நாடுகடத்த சுவிட்சர்லாந்துக்கு தடை விதித்துள்ள ஐரோப்பிய நீதிமன்றம்! -
Reviewed by Author
on
November 06, 2019
Rating:

No comments:
Post a Comment