இலங்கையின் வடக்கு கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை -
கொழும்புக்கு மேல் வளிமண்டலத்தில் தூசு மற்றும் மாசுக்களின் அளவு 100% வீதமாக அதிகரித்து வளி மாசடைதல் ஏற்பட்டமை தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரி பிரேமசிரியை எமது செய்திப்பிரிவு தொடர்பு கொண்டபோதே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று இந்தியாவில் ஏற்பட்ட பாரிய புகைமண்டலம் காற்றுக்காரணமாக இலங்கையின் பக்கமாக திருப்பிவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பு பகுதியில் தூசி துகள்கள் மற்றும் மாசுக்கள் வளிமண்டலத்தில் கலந்து வளிமாசடைந்ததுள்ளது. நேற்று காலை வளிமண்டலத்தில் குறைவான அளவில் கலந்திருந்த குறித்த மாசுக்கள் மாலையளவில் 100 % ஆக உயர்வடைந்திருந்தது.
இந்நிலையில் இன்றையதினம் காற்றின் திசை மாறியுள்ளதால் வளிமண்டலத்தில் கலந்த தூசுக்களின் அளவு 60 % - 77 % ஆக குறைவடைந்துள்ளது. மேலும் காற்று வீசும் திசையை பொறுத்தே வளிமண்டலத்தில் கலந்துள்ள மாசுக்களின் அளவு அதிகரிக்குமா, குறைவடையுமா என்பது பற்றி தெரிவிக்க முடியும்.
அதே வேளை வடக்கு ,மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் வாழும் மக்கள் தூசிக்காற்று தொடர்பில் அவதானமாக செயற்படடுமாறும் சுவாச நோயாளர்கள் உரிய வகையில் பாதுகாப்பாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் வடக்கு கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை -
Reviewed by Author
on
November 06, 2019
Rating:

No comments:
Post a Comment