புத்தளம் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் மன்னார் வாக்காளர்கள் தனியார் பேரூந்துகளில் வாக்களிக்க வருவதற்கு தடை
புத்தளம் பகுதியில் வாழும் மன்னார் மாவட்ட வாக்காளர்கள் வாக்களிப்பு
வருகை தருவதற்கு இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளே ஒழுங்கு
செய்யப்படும் என மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன்
இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகரும் மன்னார் மாவட்ட அரசாங்க
அதிபருமான சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள், கட்சி முகவர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கான தேர்தல் முன்னோடிக் கூட்டம் நேற்று முன்தினம் திங்கள் கிழமை (04.11.2019) பிற்பகல் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன்
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்
மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டு
புத்தளம் பகுதியில் வசிப்பிடமாக கொண்டவர்கள் கடந்த காலங்களைப்போன்று இம்முறை இங்கு வாக்களிக்க வருவதற்கு தனியார் பேரூந்துகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
இதற்கு காரணம் கடந்த காலங்களில் வாக்களிப்பு வேளைகளில் புத்தளம்
பகுதியிலிருந்து பல தனியார் பேரூந்துகளை அரசியல் தலைவர்கள் வாடகைக்கு அமர்த்தி வாக்காளர்களை மன்னாரில் வாக்களிப்பதற்கு அழைத்து வருவதாகும்
இவ்வாறு அழைத்து வரும்பொழுது இவ் வாக்காளர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு வருவதுடன் பணமும் வழங்கப்பட்டு அதற்குள் பிரச்சாரமும் இடம்பெற்று வருவதாக கடந்த காலங்களில் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்துள்ளன.
இவற்றை கவனத்தில் கொண்டு இம்முறை புத்தளத்திலிருந்து வாக்காளர்கள்
மன்னாருக்கு வாக்களிக்க வருவதற்கு தனியார் பேரூந்துகளுக்கு அனுமதி
வழங்கப்படமாட்டாது.
ஆனால் இவ் வாக்காளர்களின் நலன்நோக்கி இலங்கை போக்குவரத்து சபை
பேரூந்துகளின் சேவையை அதிகரித்து இவர்கள் அதில் பயணிப்பதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ் தேர்தல் சட்டத்தை மீறி தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுமாகில்
கடும் நடவடிக்கை எடுக்கும்படி பொலிசாரிடம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. ஆகவே தேர்தல் சட்டங்களை பொலிசார் நீதியுடனும் நேர்மையுடனும் செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வேண்டப்பட்டது.
அவ்வாறு புத்தளத்திலிருந்து வாக்காளர்களை தனியார் பேரூந்து மூலம்
மன்னாருக்கு அழைத்து வரவேண்டும் என விரும்பினால் தேர்தல்கள்
ஆணைக்குழுவிடம் அனுமதி பெற்றுவந்தாலே மட்டும் அனுமதிக்க முடியும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் வாக்காளர்களாக பதிவு செய்து புத்தளம் பகுதியில்
இடம்பெயர்ந்து வாழும் வாக்காளர்கள் சுமார் பதின்மூவாயிரம் பேர் அங்கு
வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Reviewed by Author
on
November 05, 2019
Rating:

No comments:
Post a Comment