சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய சொல்! ஆராய்ந்த பின்னர் முடிவு என்கிறார் விக்னேஸ்வரன் -
சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி என்பதற்கு பதிலாக புதிய சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது முன்னாள் வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
தமிழ்க்கட்சிகள் முன்வைத்த 13 கோரிக்கைகளை கோத்தபாய ராஜபக்ச முழுமையாக நிராகரித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க, கோரிக்கைகளில் சிலவற்றை பரிசீலிக்கமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் சஜித் பிரேதமதாஸ அவை தொடர்பில் எதுவுமே இதுவரை கூறவில்லை.
இந்தநிலையில் பொதுமக்கள் முன்னணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் மாறாக வேறு வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவேண்டும்.
இருப்பினும் வாக்களிப்பில் இருந்து விலகவிடக்கூடாது என்று வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி என்பதற்கு பதிலாக புதிய சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதனை உரியமுறையில் ஆராய்ந்த பின்னரே தமது கருத்தை வெளியிடமுடியும் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய சொல்! ஆராய்ந்த பின்னர் முடிவு என்கிறார் விக்னேஸ்வரன் -
Reviewed by Author
on
November 05, 2019
Rating:

No comments:
Post a Comment