சஜித் அரசாங்கத்தில் பெரும்பான்மை விருப்பத்துடன் பிரதமராகும் நபர் -
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிமேதாஸ வெற்றி பெற்றால் அவரது அமைச்சரவையின் பிரதமராக அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் சஜித் பிரேமதாஸவின் தரப்பில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் கடந்த நாட்களில் பிரதமர் பதவிக்காக மேலும் பல சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
இது தொடர்பில் தனது அரசாங்கத்தில் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கமையே பிரதமர் தெரிவு செய்யப்படுவார் என சஜித் பிரேமதாஸ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சஜித் அரசாங்கத்தில் பெரும்பான்மை விருப்பத்துடன் பிரதமராகும் நபர் -
Reviewed by Author
on
November 10, 2019
Rating:

No comments:
Post a Comment