சஜித்திற்கே எமது ஆதரவு! முடிவை அறிவித்தார் செல்வம் அடைக்கலநாதன் -
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு இன்றையதினம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலின் முடிவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அக் கட்சியின் உபதலைவர் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
இவ் விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் பலத்த கருத்து நிலைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் பெரும்பான்மையாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க மத்தியகுழுவின் பெருமளவானோர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக அவருக்கு ஆதரவளிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சஜித்திற்கே எமது ஆதரவு! முடிவை அறிவித்தார் செல்வம் அடைக்கலநாதன் -
Reviewed by Author
on
November 07, 2019
Rating:

No comments:
Post a Comment