“கலை நிதி” “கலை நதி” “கலை அமுது” “புகழேந்தி” விருதுகள் பெற்ற மன்னார் மாவட்ட சாதனையாளர்கள்-படங்கள்
மன்னார் மாவட்டத்தில் கலை,விளையாட்டு ஊடகம் சமூகம் பணிகளில் தங்களை உட்படுத்தி அரும்பணியாற்றிவரும் கலைஞர்களை “கலை நிதி” “கலை நதி” “கலை அமுது” “புகழேந்தி” விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வானது தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் 3ஆம் வருட நிறைவு விழா நிகழ்வில் மன்னார் மாவட்ட தமிழமுது நண்பர்கள் வட்டம் இயக்குனர் கலைச்செம்மல் கவிஞர்
வை.கஜேந்திரன் B.A. அவர்களின் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில்
03.11.2019 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இவ்விழாவில் 19 சாதனையாளர்களும்
கௌரவிக்கப்பட்டனர்.
மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை மாணவ மாணவிகளின் வாத்தியை இசையோடு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்த்தாய்வாழ்த்திசைக்க இவ் நிகழ்வு ஆரம்பத்தில் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் ஆலோசகராக இருந்து அண்மையில் இறைவனடி சேர்ந்த அமரர் ஆயுள்வேத வைத்தியகலாநிதி தேசபந்து தேசகீர்த்தி தேசாபிமானி S.லோகநாதனின் BSMS,JP அவர்களின் உருவப்படத்துக்கு அவரின் புத்திரரால் தீபமேற்றி மாலை அணிவிக்கப்பட சபையோர் அஞ்சலியும் செலுத்திய நிகழ்வும் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் நகர் பிரதேச செயலாளர் திருமதி க.சிவசம்பு, சிறப்பு விருந்தினர்களாக மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் M.Y.மாஹிர், மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் S.E.றெஜினோல்ட் (FSC), மன்.சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை அதிபர் T.தனேஸ்வரன் உட்பட மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் வைத்தியகலாநிதி M.கதிர்காமநாதன், சட்டத்தரணி S.டினேஷன் ஆகியோரும் கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பித்தனர்.
மாணவ மாணவிகள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்ச்சி தொகுப்பினை ஊடகவியலாளர் J.நயன் அவர்கள் தொகுத்து வழங்க மாலை விழா இனிதே நிறைவுற்றது.
- தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் 3ஆம் வருட நிறைவு விழா நிகழ்வில் கலைஞர் கௌரவிப்புமன்னார் மாவட்டத்தில் 15வருடங்களுக்கு மேலாக இசைத்துறை வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிவரும் இசையாசிரியர் செல்வி.A.J.அருள்மொழி லெம்பேட் அவர்களுக்கு“கலை நதி”எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்-
- மன்னார் மாவட்டத்தில் 15வருடங்களுக்கு மேலாக கவிதை கலை இலக்கியத்துறை வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிவரும் திரு.P.பெனில் அவர்களுக்கு “கலை நிதி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.-
- மன்னார் மாவட்டத்தில் 35வருடங்களுக்கு மேலாக நாவல் கலை இலக்கியத்துறை வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிவரும் தேசிய கலைஞர் திரு.S.A..உதயன் அவர்களுக்கு “கலை அமுது”எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தின்; பிரதி நிதியாக இலங்கை தேசிய உதை பந்தாட்ட அணியில் நட்சத்திர வீரராக திறமையை வெளிப்படுத்திய திரு.V.R.J.எடிசன் பிகிராடோ அவர்களுக்கு “புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தின் பிரதி நிதியாக இலங்கை தேசிய உதை பந்தாட்ட அணியில் நட்சத்திர வீரராக திறமையை வெளிப்படுத்தி வரும் திரு.Y.D.பியூஸ்லஸ் அவர்களுக்கு “புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தின் பிரதி நிதியாக இலங்கை இராணுவ தேசிய குத்துச்சண்டை அணியில் வீரராக திறமையை வெளிப்படுத்தி வரும் திரு.P.துசியந்தன் அவர்களுக்கு “புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தின் பிரதி நிதியாக தேசிய ரீதியில் தைக்கொண்டோ வீராங்கனையாக திறமையை வெளிப்படுத்தி வரும் செல்வி.நா.லுஜாந்தினி அவர்களுக்கு “புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தில் இருந்து இலங்கை தேசிய உதை பந்தாட்ட அணிக்கு தெரிவான முதல் வீராங்கனை செல்வி.T.டிலுக்ஷனா அவர்களுக்கு “புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தின் பிரதி நிதியாக சர்வதேச ரீதியில் நன்னீர் சுத்திகரிப்பு நிபுணராக தேர்வாகியுள்ள பொறியியலாளர் திரு.ம.ராஜ்குமார் அவர்களுக்கு “புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தின்; பிரதி நிதியாக இலங்கை தேசிய ரக்பி அணியில் நட்சத்திர வீரராக திறமையை வெளிப்படுத்தி வரும் செ.சானிகா டிலானி அவர்களுக்கு எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தின் பிரதி நிதியாக இலங்கை தேசிய ரீதியில் ஜிம்னாஸ்ரிக் துறையில் சாதனை புரிந்த M.Y.சஹிபுல் யமீன் அவர்களுக்கு“புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தின்பிரதி நிதியாக ஊடகத்துறையில் 50 வருடங்களாக அரும்பணியாற்றி வரும் L.C.வாஸ் கூஞ்ஞ அவர்களுக்கு “புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை 2018 தேசிய மட்ட தமிழ்தினப்போட்டியில் நாடகத்துறையில் 1ஆம் இடம் பெற்றமைக்கா நாடக ஆசிரியர் திரு.தெ.டினேஸ் அவர்களுக்கு “புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை 2018 தேசியமட்ட தமிழ்தினப்போட்டியில் நாடகத்துறையில் 1ஆம் இடம் பெற்றமைக்கா ஓவிய ஆசிரியர் திரு.யே.அன்ரனி அவர்களுக்கு “புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தின் பிரதி நிதியாக வட மாகாண ரீதியில் Anchor Students withTaleant பாடல் போட்டியில் கனிஷ்ர பிரிவில் 1ஆம் இடம் பெற்ற செல்வி.சி.கோபிகா அவர்களுக்கு“புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தின்; பிரதி நிதியாக சர்வதேச ரீதியில் நீர்நிலை சுத்திகரிப்பு கருவி கண்டு பிடிப்பிற்காக USA MIT பல்கலைக்கழகத்தால் சமூக விருது பெற்ற பொறியியலாளர் திரு.இ.ஜெபசாந்தன் அவர்களுக்கு “புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தின் பிரதி நிதியாக வட மாகாண ரீதியில் Anchor Students withTaleant பாடல் போட்டியில் சிரேஷ்ர பிரிவில் 1ஆம் இடம் பெற்ற செல்வன்.S.திலக்ஷன் அவர்களுக்கு “புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.-
- மன்னார் மாவட்டத்தின் பிரதி நிதியாக இலங்கை தேசிய உதை பந்தாட்ட அணியில் 16வயதிற்குட்பட்ட பிரிவில் வீரராக திறமையை வெளிப்படுத்திய திரு.N.K.சயன் டானி அவர்களுக்கு “புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- மன்னார் மாவட்டத்தின் பிரதி நிதியாக இலங்கை தேசிய ரீதியில் தடை தாண்டல் ஓட்ட வீரராக திறமையை வெளிப்படுத்திவரும் திரு.A.அபிக்ஷன் அவர்களுக்கு“புகழேந்தி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை மாணவ மாணவிகளின் வாத்தியை இசையோடு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்த்தாய்வாழ்த்திசைக்க இவ் நிகழ்வு ஆரம்பத்தில் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் ஆலோசகராக இருந்து அண்மையில் இறைவனடி சேர்ந்த அமரர் ஆயுள்வேத வைத்தியகலாநிதி தேசபந்து தேசகீர்த்தி தேசாபிமானி S.லோகநாதனின் BSMS,JP அவர்களின் உருவப்படத்துக்கு அவரின் புத்திரரால் தீபமேற்றி மாலை அணிவிக்கப்பட சபையோர் அஞ்சலியும் செலுத்திய நிகழ்வும் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் நகர் பிரதேச செயலாளர் திருமதி க.சிவசம்பு, சிறப்பு விருந்தினர்களாக மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் M.Y.மாஹிர், மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் S.E.றெஜினோல்ட் (FSC), மன்.சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை அதிபர் T.தனேஸ்வரன் உட்பட மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் வைத்தியகலாநிதி M.கதிர்காமநாதன், சட்டத்தரணி S.டினேஷன் ஆகியோரும் கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பித்தனர்.
மாணவ மாணவிகள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்ச்சி தொகுப்பினை ஊடகவியலாளர் J.நயன் அவர்கள் தொகுத்து வழங்க மாலை விழா இனிதே நிறைவுற்றது.
“கலை நிதி” “கலை நதி” “கலை அமுது” “புகழேந்தி” விருதுகள் பெற்ற மன்னார் மாவட்ட சாதனையாளர்கள்-படங்கள்
Reviewed by Author
on
November 16, 2019
Rating:

No comments:
Post a Comment