கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை -
இலங்கையின் பல பகுதிகளில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று மேலும் அதிகரிப்பு ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 100 - 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு, ஊவா, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை -
Reviewed by Author
on
December 20, 2019
Rating:

No comments:
Post a Comment