பிரபாகரன் காலத்திலேயே பெண்களின் வகிபாகம் சிறப்பாக இருந்தது! சிறீதரன் -
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் காலத்திலேயே பெண்களின் வகிபாகம் சிறப்பாக இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணித் தெரிவு நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் எங்கள் பெண்களை தலைவர் பிரபாகரன் பல பரிணாமத்துடன் வளர்த்தார்.
இந்த மண்ணிலே சகோதரி இசைப்பிரியா மற்றும் இன்னும் பல சகோதரிகளுக்கு ஏனைய என்ன நடந்தது என்பதை இந்த உலகம் நன்கு அறியும்.
அத்துடன் இலங்கை அரசின் புலனாய்வு எவ்வாறு செயற்படும் என்பதை தமிழ் பெண்களுக்கு நிகழ்ந்த உதாரணங்களை விட தற்போது சுவிஸ் தூதரக பெண்ணிற்கு நிகழ்ந்திருப்பதனூடாக சிங்கள சகோதரர்களும் தற்போது அறிந்திருப்பார்கள்.
தமிழ் மக்களுக்கான எந்த அதிகாரப் பகிர்வும் கொடுக்க முடியாது எனக்கூறும் ஜனாதிபதியோடு சேர்ந்து சிலர் அமைச்சராக அபிவிருத்திக் குழுவின் தலைவராக எல்லாம் இருக்கிறார்கள்.
சிங்கள பௌத்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள மக்கள் விரும்புபவையையே கொடுப்பேன் என்பவருக்கு ஆதரவளித்து எம் இனத்தை மீள சிதைக்கவும் மீண்டும் எமது மக்களுக்கு கொலை அச்சுறுத்தல்களையும் வழங்கத் தயாராகி இருக்கிறது.
எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது நாம் பயணிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் காலத்திலேயே பெண்களின் வகிபாகம் சிறப்பாக இருந்தது! சிறீதரன் -
Reviewed by Author
on
December 20, 2019
Rating:

No comments:
Post a Comment