அண்மைய செய்திகள்

recent
-

2019 ல் சினிமாவை சோகமாக்கிய பிரபலங்களின் மரணம்! இவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள்


2019 ம் வருடம் இப்போது தான் தொடங்கியது போல இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வருடமே முடிந்து போன மாதிரி ஆகிவிட்டது. வருடத்தின் இறுதியில் நாம் தற்போது இருக்கிறோம்.

இந்த சினிமாவில் பல பிரபலங்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்கள் யாரெல்லாம் என பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான ஜே மகேந்திரன் உடல் நலக்குறையில் சென்னையில் கடந்த ஏப்ரல் 2 ல் காலமானார்.

ஜூன் மாதத்தில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான கிர்ஷ் கர்னாட் பெங்களூரில் காலமானார்.

செப்டம்பர் மாதம் தெலுங்கு சினிமாவின் பிரபல காமெடியன் வேணு மாதவ் சிறுநீரக பிரச்சனையால் காலமானார்.

அக்டோபர் மாதம் நடிகரும் அரசியல் பிரமுகருமான நண்டாமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.

கேரளாவை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் பால பாஸ்கர் கார் விபத்தில் அக்டோபர் மாதம் இறந்தார்.

பலரையும் சிரிக்க வைத்த காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் (66) குளியலறையில் வழுக்கி விழுந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே கடந்த அக்டோபர் மாதத்தில் மரணமடைந்தார்.

மானாட மயிலாட, லொள்ளு சபா, மிமிக்ரி, நடனம் என கலக்கி வந்த நடிகர் மனோ அதே மாதத்தில் கார் விபத்தில் காலமானார்.

தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கிட்டத்தட்ட 500 க்கும் அதிகமான படங்களின் நடித்துள்ள பிரபல நடிகை கீதாஞ்சலி காலமானார்.

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி என்ற பாடலை இசை மீட்டிய சாக்ஸ போன் கலைஞர் கத்ரி கோபால் நாத் உயிர் விட்டார்.

தமிழ் திரையுலகில் பலரையும் மிக மன வருத்தத்திற்குள்ளாக்கிய செய்தி இயக்குனர் அருண்மொழியின் மரணம். நடிகர், இயக்குனர், ஆவண பட இயக்குனர், எழுத்தாளர், ஆசிரியர் என பல திறமை கொண்டவர் நவம்பர் மாதம் காலமானார்.

தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகர்கள் உள்ளனர். அதில் பல நூறு படங்களில் நடித்துள்ள ஒருவர் தான் பாலா சிங், இவர் உடல் நலம் சரியில்லாமல் கடந்த நவம்பர் மாதம் இறந்து போனார்.

நடிகரும் கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் மாரடைப்பால் நவம்பர் மாதம் காலமானார்.

2019 ல் சினிமாவை சோகமாக்கிய பிரபலங்களின் மரணம்! இவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள் Reviewed by Author on December 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.