அண்மைய செய்திகள்

recent
-

உலகில் 2019-ஆம் ஆண்டு அதிகம் பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்ட நாடு... எது தெரியுமா? -

உலகில் இந்த ஆண்டு ஐரிஷ் பாஸ்போர்ட்டுகள் அதிகம் விநியோகிக்கப்பட்டு உச்ச கட்ட சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலாப்பயணமோ அல்லது வேலை காரணமாக சென்று வருகின்றனர். ஒரு சிலர் அந்த நாட்டிலே தங்குவதற்கும் முடிவு செய்வர்.

அப்படி ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விமானம் மூலம் செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட் மிகவும் முக்கியம், அப்படி இந்த ஆண்டு(2019)-ல் ஐரிஷ் பாஸ்போர்ட்(Irish passports) கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகரித்து 12 மாதங்களில் 900,000 க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதம் 2016-ஆம் ஆண்டு பிரெக்சிட் வாக்களித்ததில் இருந்தே வடக்கு அயர்லாந்து மற்றும் கிரேட் பிரிட்டனில் இருந்து விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.




இந்த ஆண்டு மட்டும் வடக்கு அயர்லாந்து அல்லது கிரேட் பிரிட்டனில் பிறந்தவர்களிடமிருந்து 94,500-க்கும் மேற்பட்ட முதல் முறை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நாட்டின் பாஸ்போர்ட் சேவைக்கு இது ஒரு பம்பர் ஆண்டு என்று வெளியுறவு மந்திரி சைமன் கோவ்னி தெரிவித்துள்ளார்.
ஐரிஷ் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை, 2019 ஆம் ஆண்டில் உச்ச காலங்களில், நாள் ஒன்றிற்கு 5,800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

ஜனவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 100,000 எனவும், இந்த ஆண்டில்,
ஐரிஷ் பாஸ்போர்ட்டுகளுக்கான விண்ணப்பங்களில் மிகவும் பிரபலமான குடும்பப்பெயர் மர்பி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகில் 2019-ஆம் ஆண்டு அதிகம் பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்ட நாடு... எது தெரியுமா? - Reviewed by Author on December 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.