2020ஆம் ஆண்டு வெளிவர காத்திருக்கும் முக்கிய படங்கள், ஒரு சிறப்பு பார்வை.
2019ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவிற்கு பல படங்ககள் சிறப்பாகவும் லாபகரமாவும் அமைந்தது. சில திரைப்படங்கள் கசப்பான அனுபவத்தையும் ரசிகர்களுக்கு கொடுத்தது.
அதில் லாபகரீதியாக பார்த்தால் விஸ்வாசம், எல் கே ஜி, கோமாளி, அசுரன், நம்ம வீட்டு பிள்ளை, கைதி, தடம், ஏ1, காஞ்சனா 3 போன்ற படங்கள் மக்களிடமும் வசூல் ரீதியாக லாபகரமாக அமைந்தது.
மேலும், பாக்ஸ் ஆப்பிஸ் அடிப்படையில் உலகம் முழுவதும் பிகில், பேட்ட, விஸ்வாசம், காஞ்சனா 3, கைதி, நேர்கொண்ட பார்வை, நம்ம வீட்டு பிள்ளை, காப்பான், அசுரன்,எஞ்.ஜி.கே போன்ற படங்கள் நன்றாக வசூலித்தது.
இதையெல்லாம் விட ரசிகர்கள் மத்தியிலும் ஜென்ரல் ஆடியன்ஸ் மத்தியிலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த ராட்சசஸி, சிவப்பு மஞ்சள் பச்சை, வெள்ளைப்பூக்கள், காளிதாஸ், போன்ற படங்கள் மிக பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும், இந்த ஆண்டை விட வரும் ஆண்டில் வெளிவர காத்திருக்கும் படங்களுக்கு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் இந்த ஆண்டு தமிழ் திரையுலகில் வெளிவந்த படங்கள் மட்டுமே சுமார் 1300 கோடி வசூலித்தது தான் இதற்கு காரணமாகும்.
இந்நிலையில் தற்போது 2020ஆம் ஆண்டு ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவர காத்திருக்கும் படங்களின் ஒரு சிறப்பு பார்வையின் பட்டியல் இதோ.
1. தர்பார்
2. இந்தியன் 2
3. தளபதி 64
4. வலிமை
5. சூரரைப்போற்று
6. பட்டாஸ்
7. டாக்டர்
8. தலைவி
9. விக்ரம் 58
10. கடைசி விவசாயி
11. மாஃபியா
12. மாநாடு
13. மூக்குத்தி அம்மன்
14. பொன்னியின் செல்வன்
15. தலைவர் 168
எனினும் 2020ஆம் ஆண்டு வெளிவரும் இந்த படங்கள் யாவும் எந்தளவு வசூலிக்கும். எந்தெந்த படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2020ஆம் ஆண்டு வெளிவர காத்திருக்கும் முக்கிய படங்கள், ஒரு சிறப்பு பார்வை.
Reviewed by Author
on
December 23, 2019
Rating:

No comments:
Post a Comment