அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை: முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த உறுதி -


முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை குறித்து பரிசீலிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

மாகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 19 ஆம் திகதி கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

குறித்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து, இரவு 8 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அரை மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார்.
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் தமிழக அரசு கொடுக்கிறது.

அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை மற்றும் 20 கிலோ அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஈழத்தில் இருந்து தமிழகம் வந்த தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறார்.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு ஏதுவாக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்து பேசியபோதும் இதே கோரிக்கையை முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை: முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த உறுதி - Reviewed by Author on December 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.