609 ஆண்டு பழமையான மசூதியை அப்படிய பெயர்த்து எடுத்து கொண்டு செல்லப்பட்ட வீடியோ! வெளியான காரணம் -
துருக்கியின் தெற்கு பகுதியில் பாட்மான் மாகாணத்தில் இருக்கும் ஹசன்கீப் என்ற நகரம் பழமையான நகரம் என்று கூறப்படுகிறது. இங்கு தான் அந்த நாட்டின் கட்டிடக்கலையை பறைசாற்றும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன.
இந்நிலையில் ஹசன்கீப் நகரில் உள்ள டைக்ரிஸ் ஆற்றுக்கு அருகே லிசு என்ற பிரமாண்ட அணை கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் முடிவடைந்ததும் டைக்ரிஸ் ஆற்றில் இருந்து லிசு அணைக்கு தண்ணீர் திருப்பிவிடப்படும்.
அப்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டால், ஹசன்கீப் நகரில் இருக்கும் கட்டிடங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்பதால், அங்கு உள்ள வரலாற்று சின்னங்கள் அனைத்தும் படிப்படியாக அருகில் உள்ள பகுதிகளுக்கு மாற்றப்படுகிறது.
அந்த வகையில் ஹசன்கீப் நகரில் உள்ள 609 ஆண்டுகள் பழமையான எரி ரிஸ்க் என்ற மசூதி பெயர்த்து எடுக்கப்பட்டு வாகனம் மூலம் மூன்றரை கி.மீற்றர் தொலைவில் உள்ள ஹசன்கீப் கலாசார பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
1,700 டன் எடை கொண்ட எரி ரிஸ்க் மசூதியின் மேல் பகுதி தனியாகவும், கீழ் பகுதி தனியாகவும் பிரிக்கப்பட்டு 2 தனித்தனி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
609 ஆண்டு பழமையான மசூதியை அப்படிய பெயர்த்து எடுத்து கொண்டு செல்லப்பட்ட வீடியோ! வெளியான காரணம் -
Reviewed by Author
on
December 18, 2019
Rating:

No comments:
Post a Comment