மன்னாரில் மருந்துகளின் விலையால் திணறும் மக்கள் அரசாங்க மருந்துக்கூட்டுத்தபனம் (அரச ஒசுசல) மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டும் மக்கள் வேண்டுகோள்….
அரசாங்க மருந்துக்கூட்டுத்தபனம் SPC -STATE PHARMACEUTICALS CORPORATION OFSRILANKA (அரச ஒசுசல-RAJYA OSU SALA) இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ளது மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டும் மக்கள் வேண்டுகோள்….
மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற பொதுவைத்திய சாலையானது பல கிராமங்களின் பிரதானமானது ஆனால் அந்த வைத்திய சாலைக்கு வருகின்ற நோயாளிகள் மிகுந்த பயத்துடன் வேறுவழியின்றி செல்ல வேண்டிய நிலை இதற்கு காரணம் மன்னார் பொதுவைத்திய சாலையில் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு வகையில் ஒரு உயிர் பறிபோகின்றது.
அந்த இறப்பில் சந்தேகம் எழுகின்றது அதற்கான தீர்வு கிடைக்காமலே இன்னும் தொடர்கின்றது.…யார் பொறுப்பு......
இங்கே சொல்ல வந்த விடையம் என்னவென்றால் பொதுவைத்தியசாலைக்கு செல்ல பயப்படும் அநேகமான மக்கள் அடுத்து செல்வது தனியார் கிளினிக் மற்றும் பாமசிகளைத்தான் .
இந்த முறையில் தான் புலியிடம் தப்பி சிங்கத்திடம் சிக்குவது போல என்று சொல்வார்கள் அப்படித்தான் வைத்திசாலைக்கு பயந்து பாமசிகள் மற்றும் தனியார் கிளினிக்களில் சிக்கிக்கொள்ளுகின்றார்கள் இப்படி வரும் மக்களை சும்மா விடுவோமா..... ஒரு கை பார்த்துவிடுவோம் அல்லவா….
கொஞ்சம் பணம்படைத்தவர்கள் நேராக பாமசிக்கும் கிளினிக்கும் செல்வார்கள் பாமர மக்கள் எது நடந்தாலும் வைத்தியசாலைக்குத்தான் செல்வார்கள் அவர்களுக்குரிய மருந்துகளையும் பொதுவைத்திய சாலையில் இல்லை என்று மருத்துவர்கள் விளங்காத ஆங்கில மொழியில் எழுதி சில பாமசிகளை சிபாரிசு செய்வார்கள் அங்கு தான் வாங்க வேண்டும் .
அந்த மருந்துதான் நல்ல மருந்து மற்ற இடத்தில் வாங்கினால் அது கூடாதாம் அதுமட்டுமா.... சாதாரணமாய் 100ரூபாய் ஒரு மருந்தின் விலை என்றால் அதே மருந்து அடுத்த பாமசியில் 200 ரூபாய் அதே மருந்து இன்னுமொரு பாமசியில் 350 ரூபாய் ஏன் என்று பாமரமக்களும் சாதரண மக்களும் கேட்கப்போவதில்லை.... ஏன் என்றால்...??? அதன் தரம் தராதரம் போன்ற விடையங்கள் தெரியாது. ஆனால் மருந்து வேண்டும் அல்லவா….
சற்று விபரம் தெரிந்தவர்களும் படித்தவர்களும் ஏன் இவ்வளவு விலை என்று கேட்டால் அதற்கு மருந்துகளில் பல வகையுள்ளது ஒறிஜினல்,நோமல் என்று அவர்களையும் மடக்கிவிடுவார்கள் பிறகென்ன யார்...? கேள்வி கேட்க இருக்கின்றார்கள் தங்கள் விருப்படி விலையை ஏற்றி விற்க வேண்டியது தான்.
சாதரண பணடோல் முதல் சாவைத்தடுக்கும் மருந்துகள் வரை சாதனை விலையில் தான் விற்பனை.......
இந்தக்கேள்விகளுக்கு விடையுண்டா…???????
இதற்கு எல்லாம் சரியான உயர்வான தீர்வாக அமையும் என்றால் அது அரசாங்க மருந்துக்கூட்டுத்தபனம் அரச ஒசுசல மன்னார் மாவட்டத்தில் அமைக்கபட வேண்டும். இது ஒன்றே சரியான தீர்வாகும்.
மன்னார் மக்களின் நோயாளிகளின் நலனில் அக்கறை கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அரசாங்க மருந்துக்கூட்டுத்தாபனம் அரச ஒசுசல கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோள் இவ்வேண்டு கோளை மன்னார் மாவட்டத்தினை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களே....! அரசதிணைக்கள அதிகாரிகளே...! உடனடியாக விரைந்து செயற்படவேண்டும்.
மக்களின் வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த உணவுதான் கிடைக்க விட்டாலும் சிறந்த மருந்து குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.
அவசியமாய் அவசரமாய் அரசாங்க மருந்துக்கூட்டுத்தபனம் அரச ஒசுசல மன்னார் மாவட்டத்தில் அமைக்கபட வேண்டும்.
-மன்னார் காவலன்-

- அதிக விலையில் அவசியமான மருந்துகள்
- உண்மை விலையை விட இரண்டு மூன்று மடங்கு விலை அதிகம்
- உண்மை விலையிடப்பட் சீலுக்கு மேல் தங்களது அதிக விலை அச்சிட்ட சீலடித்து விற்பனை செய்தல்.
- தினக்கூலிகள் நாள் ஒன்றுக்கு 800ம் 1000ம் பெறும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்றார்கள்.
சாதரண பணடோல் முதல் சாவைத்தடுக்கும் மருந்துகள் வரை சாதனை விலையில் தான் விற்பனை.......
இந்தக்கேள்விகளுக்கு விடையுண்டா…???????
- மன்னாரில் உள்ள பாமசிகள் வைத்திய மருந்துக்கூட்டுத்தாபனத்தின் சட்டத்தில் பதியப்பட்டுள்ளதா.???
- பாமசிகளில் வேலை செய்கின்ற மருந்தாளர்கள் முறையாயன தேர்ச்சி பெற்றவர்களா…???
- பாமசிகளில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் அதை தடுக்க வைத்திய அதிகாரிகள் மன்னாரில் இல்லையா… எப்படி தடுப்பார்கள் அவர்களும் பாமசிகள் வைத்திருக்கின்றார்களே…!
இதற்கு எல்லாம் சரியான உயர்வான தீர்வாக அமையும் என்றால் அது அரசாங்க மருந்துக்கூட்டுத்தபனம் அரச ஒசுசல மன்னார் மாவட்டத்தில் அமைக்கபட வேண்டும். இது ஒன்றே சரியான தீர்வாகும்.
மன்னார் மக்களின் நோயாளிகளின் நலனில் அக்கறை கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அரசாங்க மருந்துக்கூட்டுத்தாபனம் அரச ஒசுசல கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோள் இவ்வேண்டு கோளை மன்னார் மாவட்டத்தினை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களே....! அரசதிணைக்கள அதிகாரிகளே...! உடனடியாக விரைந்து செயற்படவேண்டும்.
மக்களின் வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த உணவுதான் கிடைக்க விட்டாலும் சிறந்த மருந்து குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.
அவசியமாய் அவசரமாய் அரசாங்க மருந்துக்கூட்டுத்தபனம் அரச ஒசுசல மன்னார் மாவட்டத்தில் அமைக்கபட வேண்டும்.
-மன்னார் காவலன்-
மன்னாரில் மருந்துகளின் விலையால் திணறும் மக்கள் அரசாங்க மருந்துக்கூட்டுத்தபனம் (அரச ஒசுசல) மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டும் மக்கள் வேண்டுகோள்….
Reviewed by Author
on
December 14, 2019
Rating:

No comments:
Post a Comment