தேசிய ரீதியில் ரோபோ தொழில்நுட்ப போட்டியில் 3வது இடத்தை பெற்ற எழிலினி இன்பதாஸ்
இலங்கை பாடசாலைகளிக்கு இடையில் நடைபெற்ற ரோபோ தொழில்நுட்ப போட்டியில் வடக்கு மாகாண மாணவிக்கு வெண்கல பதக்கம்.
Medical Box என்ற மருத்து , மாத்திரைகளை உட்கொள்ளும் நேரத்தை ஞாபகப்படுத்தும் உபகரணத்தை கண்டு பிடித்து மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையை சேர்ந்த எழிலினி இன்பதாஸ் அவர்கள் தேசிய மட்டத்தில் 3வது இடத்தை பெற்றுக்கொண்டு உள்ளார்.
இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் 28.10.2019 நடைபெற்ற ரோபோ தொழில்நுட்ப போட்டியில் சுகாதாரம் சம்பந்தமான துறையில் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த எழிலினி இன்பதாஸ் அகில இலங்கை ரீதியில் 3வது இடத்தை பெற்றுக்கொண்டு உள்ளார்.
மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு 28.10.2019 தேசிய ரீதியான போட்டியில் பங்குபற்றி 10.12.2019 கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க கல்வி அமைச்சரால் மூன்றாம் இடத்திற்கான வெண்கல பதக்கமும் , சான்றிதழும் , பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
வடமாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒரே ஒரு தமிழ் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய தந்தையார் பிரபலமான தமிழ் ஆசிரியராவர்.
இலைமறைகாயாக இருக்கும் மாணவ செல்வங்களினை ஊக்கப்படுத்தினால் ஆக்கமான தேசத்தின் சிந்தனை திறன்மிக்க அருமையான சாதனைகளைபடைத்துக்கொண்டே இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை இம்மாணவிக்கும் பயிற்றுவித்த ஆசிரியர் அதிபர் பாடசாலைச்சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம் .

Reviewed by Author
on
December 14, 2019
Rating:

No comments:
Post a Comment