கிறிஸ்து பிறப்பு விழா அர்த்தமுள்ள விழாவாக அமைய வேண்டும். மெதடிஸ்த திருச்சபை அருட்பணி கே.ஜெகதாஸ் அடிகளார்.
கிறிஸ்து பிறந்த அந்த சூழ்நிலையிலும் மரண ஓலம் அங்கு ஏற்பட்டிருந்தது.
காரணம் மூவியரசர்களின் தடம்மாறியதுக்கான காரணமே. ஆகவே நாமும் கிறிஸ்து பிறப்பு விழாவில் தடம்மாறிய நிலைமையை உருவாக்காது இவ் விழாவை அருத்தமுள்ள விழாவாக மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கை மெதடிஸ்த திருச்சபை அருட்பணி கே.ஜெகதாஸ் (JAGATHAS) அடிகளார் தனது கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியாக இதை
தெரிவித்துள்ளார்.
கிரான் சேகரம் இலங்கை மெதடிஸ்த திருச்சபை அருட்பணி கே.ஜெகதாஸ் தனது கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் எங்கள் வாழ்வில் நாங்கள் மீண்டும் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுக்குள்ளே காலடி எடுத்து வைக்கின்றோம்.
-வழமைக்கு சற்று மாறாக எமது நாட்டின் சூழல் பல்வேறு மாற்றங்கள் மட்டுமல்ல அச்சமான ஒரு சூழலும் காணப்படுகின்றது.
-தற்பொழுதுள்ள சூழலிலே எமது நாடானது காலநிலை மாற்றத்துக்கு முகம்
கொடுத்து அந்த காலநிலையின் சீர் இன்மையால் மக்கள் பலவிதமான
துன்பங்களையும் அழிவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
-அதுமட்டுமல்ல அரசியல் மாற்ற சூழ்நிலை காரணமாகவும் மக்கள் மத்தியில் ஒரு அச்சமான அதுவும் எதிர்காலம் எப்படி இருக்குமோ நம்முடைய மானிட வாழ்வின் சாதாரண வாழ்வியல் இயல்பு கேள்விக்குறியதாக்கப்;படுமோ என்று பலர் வாழ்ந்து கொண்டிருக்கினறனர்.
-இந்த நிலையில் நாங்கள் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்புக்குள்ளே காலடி
எடுத்து வைக்கின்றோம்.
-இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் கிறிஸ்து பிறந்த பலஸ்தீனா
சூழலிலும் இவ்வாறான ஒடுக்கு முறையான நம்பிக்கையற்ற அவர்களின்
எதிர்பார்ப்புக்கள் சிதைந்துபோன சூழ்நிலையில்தான் கிறிஸ்து பிறந்தார். இன்றும்கூட எமது மக்கள் வாழ்விலே சிறப்பாக தமிழ் மக்கள் வாழ்விலே
சிதறிபோயிருக்கும் நம்பிக்கைகள் எதிர்காலம் நிச்சயம் அல்லாத சூழல் தங்கள் தொடர்ச்சியான வாழ்வியல் வரலாற்றிலே எழுபது அண்டுகளுக்கு மேலாக வாழ்வியல் உரிமை போராட்டம் மழுங்கடிக்கப்பட்ட சூழலிலும் பல்வேறுவிதமான நம்பிக்கையற்ற நிலையிலே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
-ஆனால் நமக்கு மிக பெரிய நம்பிக்கை என்னவென்றால் கடவுள் நம்மோடு
இருக்கின்றார். பல வழிகளிலே மனிதன் கடவுளை தேடுகின்ற சூழலில் கடவுள்
மனிதனை தேடி வந்த அந்த மகத்தான நாள்தான் இந்த கிறிஸ்து பிறப்பின்
நாளாகும்.
-நம்பிக்கை சிதைந்துபோன சூழ்நிழையிலே நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வியலை நகர்த்த முடியாத நிலையில் கடவுள் நம்மோடு இருக்கின்றார். என்பது எமக்கு பெரிய நம்பிக்கையை தருகின்றது.
-ஆனால் நாம் கிறிஸ்து பிறப்பு நிகழ்வை கிறிஸ்தவர்களும் சரி கிறிஸ்தவர்கள்
அல்லாதவர்களும் சரி அந்த நிகழ்வின் தாப்பரியத்தோடும் அந்த நிகழ்வின்
உண்மையத்துவத்தோடும் நாம் தேட முயற்சிக்க வேண்டும்.
-நாங்கள் இதை பண்டிகையாகவோ அல்லது கொண்டாட்டமாகவோ கழியாட்டமாகவோ எண்ணாமல்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வாழ்வு கொடுக்க வந்த கிறிஸ்துவை
அடக்கப்பட்ட மக்களுடைய அடிமையை உடைத்தெறிந்து வாழ்வு கொடுக்க வந்த கிறிஸ்துவை நாம் நம்பிக்கை கொடுக்க வந்த மகன் என நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
இன்றைய சூழலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் மக்கள், தங்கள் சொந்த வாழ்விடங்களிலிருந்து துறத்தப்பட்ட மக்கள், தங்கள் வாழ்வியலின் அபிலாiஷகளை நிறைவேற்ற முடியாத மக்கள், தங்கள் விவசாய நிலங்களிலே விவசாயம் செய்ய முடியாத மக்கள், தங்கள் உரிமையான கடலிலே மீன் பிடிக்க முடியாத மக்கள் இவ்வாறான மக்கள் மத்தியில் பிறக்கும் கிறிஸ்துவை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும்.
-இதுதான் உண்மையான கிறிஸ்து விழாவாக கிறிஸ்துவின் செய்தியின்
தார்ப்பரியமாகவும் இருக்கின்றது. கிறிஸ்து பிறப்பை அறிந்து மூன்று
ஞானிகள் அவரை காண தேடி வருகின்றார்கள்.
-இந்த நேரத்தில் இவர்களின் பயணத்தில் இவ் மூவியரசர்களும் ஒரு இடத்தில்
தடுமாறுகின்றார்கள். திவ்விய பாலனை சந்திக்க முடியாத இந்த
தடுமாற்ற்தின்போது ஏரோது அரசனை சந்திக்க வேண்டிய நிலை இவர்களுக்கு
ஏற்படுகின்றது.
-பாலன் பிறந்திருக்கும் இடத்தை திரும்பி வந்து தனக்கு சொல்லும்படி ஏரோது
விடுத்த கட்டளையை மூவியரசர்கள் நிறைவேற்றாமையால் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆகவே கிறிஸ்து பிறந்த அந்த சூழ்நிலையிலும் மரண ஓலம் அங்கு
ஏற்பட்டிருந்தது. காரணம் மூவியரசர்களின் தடம்மாறியதுக்கான காரணமே.
-ஆகவே நாமும் கிறிஸ்து பிறப்பு விழாவில் தடம்மாறிய நிலைமையை உருவாக்காது இவ் விழாவை அருத்தமுள்ள அதாவது அடக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வாழ்வு, ஏழைகளின் கண்ணீரை துடைக்கின்ற நிகழ்வாக நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் நிலைக்கு மாற்றி இவர்களுக்காக நாம் எம்மை அர்பணிக்கின்றபோது அது உண்மையான கிறிஸ்துவின் பிறப்புடைய நிகழ்வாக அமையும் என்றார்.

Reviewed by Author
on
December 28, 2019
Rating:

No comments:
Post a Comment