அந்நிய மொழிகளில் உரையாடுவதை இலகுவாக்கியது கூகுள் -
இது ஏனைய மொழிகளில் இலகுவாக உரையாடக்கூடிய வசதியை தருகின்றது.
கடந்த ஜனவரி மாதம் CES நிகழ்வில் அறிவிக்கப்பட்டிருந்ததவாறு கூகுள் ஹோம் ஸ்பீக்கர், ஸ்மார்ட் டிஸ்பிளே உட்பட மேலும் சில சாதனங்களில் இது அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி உலகெங்கிலும் உள்ள அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களை பயன்படுத்தும் பயனர்கள் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் அந்நாட்டு மொழியை அறிந்திருக்காதுவிடின் இவ் வசதியைப் பயன்படுத்தி இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள முடியும்.
தற்போது சுமார் 44 வரையான மொழிகளில் இது செயற்படக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்நிய மொழிகளில் உரையாடுவதை இலகுவாக்கியது கூகுள் -
Reviewed by Author
on
December 17, 2019
Rating:

No comments:
Post a Comment