ஆண்களுக்கு விந்தணு அதிகரிக்கும் வழிமுறைகள்! -
தக்காளி
பொதுவாக விந்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்கள் விந்தணுகளின் பாதிப்பை உருவாக்கும் ஃப்ரி ராடிக்கல்ஸிடம் இருந்தும் பாதுகாக்கும். எனவே அது அதிகம் நிறைந்த தக்காளியை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.
பாதாம் பருப்பு
பாதாம் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது, விந்தின் வடிவத்துக்கும் இயக்கத்துக்கும் உதவக்கூடியது. தினமும் 75 கிராம் அல்லது ஒரு கைப்பிடி பாதாம் பருப்பு சாப்பிடுவது விந்தணுவை பலம்பெறச் செய்யும்.
பூசணி விதை
துத்தநாகம் (Zinc) என்ற தாதுப்பொருள் ஆண்களின் விந்தணுக்களின் சீரான வளர்ச்சிக்கும் தரத்துக்கும், டெஸ்டோஸ்டீரானின் உற்பத்திக்கும் உதவுபவை. பூசணி விதையில் இந்தச் சத்து அதிகம் உண்டு. பூசணி விதைகளைத் தூக்கி எறிந்துவிடாமல், சாலட், ஸ்மூத்தீஸில் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்களின் பலம் கூடும்.
பூண்டு
பூண்டு சாதாரணமானதில்லை. இதில் முக்கியமாக இரண்டு கூறுகள் உள்ளன. இதில் இருக்கும் அலிசின் (Allicin) ரத்த ஓட்டத்தை அதிகரித்து பாலியல் ஹார்மோன்களைத் தூண்டக்கூடியது; இது விந்தணுவுக்கு எந்த பாதிப்பும் வராமல் காக்கும்.
அவகேடோ
அவகேடோவில் இருக்கும் வைட்டமின் இ, விந்தணுவின் இயக்கம் சிறப்பாக நடைபெற உதவக்கூடியது. வாரத்துக்கு ஒருமுறையாவது அவகேடோ சாப்பிடுவது ஆண்களுக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
கேரட்
விந்தணுவின் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றுவதில் கேரட்டுக்கு தனி இடம் உண்டு. காலையில் டிபனுக்கு முன்னதாக ஒரு கேரட்டை எடுத்துக் கடித்துச் சுவைப்பது ஆண்களுக்கு அவ்வளவு நல்லது. இதில் இருக்கும் எல்-கார்னிடைன் (L-Carnitine) எனும் அமினோ அமிலம், நம் வளர்சிதை மாற்றத்துக்கும், விந்தணுவின் இயக்கத்துக்கும் நன்மை செய்யக்கூடியது. இது ஆண் மலட்டு தன்மை போக்க உதவும்.
வெந்தயம்
விந்து உற்பத்தியை அதிகரிக்க இந்த வெந்தயம் பெரிதும் பயன்படுகிறது. அத்துடன் ஆரோக்கியமாக விந்துவை வைத்து கொள்ளவும் இது உதவும். எனவே, சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
ஆண்களுக்கு விந்தணு அதிகரிக்கும் வழிமுறைகள்! -
Reviewed by Author
on
December 10, 2019
Rating:

No comments:
Post a Comment