உலகின் இளம் வயது பிரதமர் சன்ன மரின் வெளியிட்ட புகைப்படம் -
34 வயதான சன்னா மரின் பின்லாந்து அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தவர்.
2015 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் சன்னா மரின், சமூக ஜனநாயக கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் ஈடுபாடு கொண்டுள்ள சன்னா மரின், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பல புகைப்படங்கள் தற்போது சரவ்தேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஒரு பிள்ளைக்கு தாயாரான சன்னா மரின் ஓரினச் சேர்க்கை தம்பதியால் வளர்க்கப்பட்டுள்ளார்.

அரசியல்வாதியாக வெற்றிகளை குவித்துவந்த சன்னா மரின் தமது கர்ப்ப காலத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மட்டுமின்றி தாய்ப்பாலூட்டும் புகைப்படங்களையும் சன்னா மரின் வெளியிட்டுருந்தார்.
இத்தாலியில் கடந்த 2017 ஆம் ஆண்டு விடுமுறை கொண்டாட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட கவர்ச்சிப் புகைப்படங்களையும் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.

சிறு வயதில் தமது பெற்றோர் தொடர்பில் வெளிப்படையாக பேச அஞ்சியதாகவும், எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் தமது குடும்பம் இருந்தது எனவும் சன்னா மரின் 2015 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.
தாம் ஒரு அரசியல்வாதி என்ற நிலையில் பெயர் எடுப்பதற்கு முழு முதல் காரணம் தமது தாயார் என கூறும் சன்னா மரின், அவரது ஊக்கப்படுத்தலே தம்மை எந்த சூழலையும் எதிர்கொள்ளும் வலிமையை தந்தது என தெரிவித்துள்ளார்.

உலகின் இளம் வயது பிரதமர் சன்ன மரின் வெளியிட்ட புகைப்படம் -
Reviewed by Author
on
December 10, 2019
Rating:
No comments:
Post a Comment