ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை! மைத்திரியின் சகோதரரின் சம்பளம் குறைப்பு -
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவரின் சம்பளத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தம்பியான குமாரசிங்க சிறிசேன, டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.
தற்போது 20 இலட்சம் ரூபா சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை இரண்டரை இலட்சமாக குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த நிலையில், அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் நீக்கப்பட்டனர். எனினும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக இன்னமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரே செயற்பட்டு வருகின்றார்.
எனினும் தனது சகோதரரின் பதவியை பாதுகாக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்ததாக தெரிய வருகிறது.
எனினும் டெலிகொம் நிறுவனத்திற்கு தகுதியான மற்றும் அனுபவம் கொண்ட ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை! மைத்திரியின் சகோதரரின் சம்பளம் குறைப்பு -
Reviewed by Author
on
December 08, 2019
Rating:

No comments:
Post a Comment