வவுனியா-சேமமடுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு -
கடந்த 1984ஆம் ஆண்டு வவுனியா சேமமடுவில் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், சேமமடு பிள்ளையார் ஆலய வளாகத்தில் நேற்று விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
கடந்த 1984ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் சேமமடு முதலாம் யூனிற் மற்றும் இரண்டாம் யூனிற் பகுதிகளுக்குச் சென்ற இலங்கை இராணுவத்தினர் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த 28 பேரை வலுக்கட்டாயமாக அழைத்து வாகனங்களில் ஏற்றிசென்று காணாமல் ஆக்கினர்.
இவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு தினமே நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா-சேமமடுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு -
Reviewed by Author
on
December 10, 2019
Rating:

No comments:
Post a Comment