நிலநடுக்கத்தினை கண்டறிய புதிய முறையை முன்மொழிந்த ஆராய்ச்சியாளர்கள்
இவற்றின் உதவியுடன் நிலநடுக்கங்களை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 20 கிலோ மீற்றர்கள் வரையான ஆழத்தில் காணப்படும் இக் கேபிள்களை பயன்படுத்துவதானது 10,000 நில அதிர்வு கண்காணிப்பு ஸ்டேஷன்களுக்கு நிகராகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் நான்கு நாட்கள் கடலடி நில அதிர்வு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதற்காக ஒளியியல் நார்களைப் பயன்படுத்தியிருந்தனர்.
குறித்த ஆய்வு வெற்றியளித்ததன் பின்னரே மேற்கண்ட கருத்தினை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இத் தொழில்நுட்பமானது Distributed Acoustic Sensing என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தினை கண்டறிய புதிய முறையை முன்மொழிந்த ஆராய்ச்சியாளர்கள்
Reviewed by Author
on
December 02, 2019
Rating:

No comments:
Post a Comment