100 ஏவுகணைகள்... 5000 அமெரிக்க வீரர்களை கொல்ல தயாராக இருந்தோம்: ஈரான் இராணுவ தளபதி! -
ஈரானின் உயர்மட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த புதன்கிழமையன்று ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஆனால் இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மத்திய கிழக்கில் ஈரானின் கரம் தாழ்ந்துவிட்டதாகவும், உலகிலே தங்களுடைய இராணுவம் வலுவானது எனவும் கூயிருந்தார்.
இந்த நிலையில் மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவுடைய போராளிகளுக்கு சொந்தமான கொடிகளின் வரிசையில், தொலைக்காட்சியில் பேசிய விமானப்படைத் தளபதி அமீர் அலி ஹாஜிசாதே, டிரம்ப் பதிலடி கொடுக்க முடிவு செய்திருந்தால் 5,000 அமெரிக்கர்களைக் கொல்லும் நோக்கில் ஈரான் 'நூற்றுக்கணக்கான' ஏவுகணைகளை செலுத்தத் தயாராக இருந்ததாக கூறியுள்ளார்.
"ஏவுகணை தாக்குதலின் போது யாரையும் கொல்லும் நோக்கில் ஈரான் இல்லை. கொல்லும் நோக்கில் செயல்பட்டிருந்தால், முதல் கட்டத்தில் 500 அமெரிக்கர்கள் கொல்லப்படும் வகையில் இந்த நடவடிக்கையை நாங்கள் வடிவமைத்திருக்க முடியும்," என்று அவர் கூறினார்.
'நாங்கள் 13 ஏவுகணைகளை வீசினோம். அதற்கு அமெரிக்காவிடம் இருந்து பதில் கிடைத்திருந்தால் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீச நாங்கள் தயாராக இருந்தோம். 'ஒவ்வொரு பதிலுக்கும் பல நாட்கள் பதிலடி கொடுக்கவும் நாங்கள் தயாராக இருந்தோம்' என பேசியுள்ளார்.
100 ஏவுகணைகள்... 5000 அமெரிக்க வீரர்களை கொல்ல தயாராக இருந்தோம்: ஈரான் இராணுவ தளபதி! -
Reviewed by Author
on
January 10, 2020
Rating:

No comments:
Post a Comment