அவுஸ்திரேலியாவில் 12,000 சிரிய மற்றும் ஈராக் அகதிகள்! -
அந்த வகையில், இத்திட்டம் நடைமுறைக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், செப்டம்பர் 2015 முதல் இதுவரை 12,000 சிரிய மற்றும் ஈராக் அகதிகள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இத்திட்டம், கடும் மனசிதைவு ஏற்படுத்திய சம்பவங்கள், ஐ.எஸ். பிடியிலிருந்து தப்பி வந்த கதைகள், போரின் காயங்கள் என அச்சுறுத்தல் மிகுந்த கடந்த காலத்தைக் கொண்ட அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் புதிய எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.
அப்படியான அகதிகளில் ஒருவர் அயத் ஹதயா. ஐ.எஸ். பிடியிலிருந்து தப்பிய போது இவருக்கு வயது 16. திரைப்பட கலையை தனது கனவாக கொண்டிருந்த அயத், லெபனான் அகதி முகாமில் வாழ்ந்த நான்கு வருட வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளார்.
ஈராக் அகதிகள் குறித்து இவர் எடுத்த குறும்படங்கள் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளன.
“நானும் எனது நண்பர்களும் ஏதேனும் வித்தியாசமாக செய்வதன் மூலம் எங்கள் சமூகத்திற்கு உதவ எண்ணினோம். அகதி முகாமின் நிலையை காட்சிப்படுத்துவதன் மூலம், ஈராக் மக்களுக்கு உதவிச்செய்ய ஐ.நா.வை உந்தித்தள்ள விரும்பினோம்,” என்கிறார் அயத்.
ஜனவரி 2018ல் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு பெற்றோருடன் வந்த அயத், அவுஸ்திரேலியாவுக்கு வந்தடைந்த பின்பு பாதுகாப்பாக உணர்வதாகக் கூறுகிறார்.
AMES அவுஸ்திரேலியா எனும் குடியமர்த்தல் சேவைக் குழு நடத்திய ஆய்வொன்றில், இவ்வாறு சிறப்பு திட்டத்தின் வழியாக அவுஸ்திரேலியாவில் குடியேறிய அகதிகளில் 80 சதவீதமானோர் தற்போது பாதுகாப்பாக உணர்வதாக கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், “இவ்வாறு புதிதாக வந்தவர்களுக்கு, குறிப்பாக அகதிகளுக்கு வேலைவாய்ப்பு என்பது மிகவும் முக்கிய பிரச்னையாக இருக்கிறது,” என்கிறார் அக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி கேத் ஸ்கார்த்.
அம்மர் அல் தயே எனும் ஈராக்கிய அகதி ஈராக்கில் அங்கீகரிக்கப்பட்ட பல் மருத்துவர். அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள இவர், அந்த அங்கீகாரத்தை அவுஸ்திரேலியாவில் பெற போராடி வருகிறார்.
“இந்த போக்கு, சில நேரங்களில் எரிச்சலூட்டும். உண்மையாகவே நீண்டதொரு நடைமுறை இது,” என்கிறார் அம்மர். “சிரியர்கள், ஈராக்கியர்கள் பல பேர் மிகவும் தகுதியுடைய-திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள திறன் தேவைகளுடன் தங்களை பொருத்திக்கொள்வதில் மிகவும் விரக்தியடைகின்றனர்,” என்கிறார் குடியமர்த்தல் சேவைக் குழுவின் கேத் ஸ்கார்த்.
பாதுகாப்பான நாடுகளில் மீள்குடியமர மில்லியன் கணக்கிலான அகதிகள் உலகெங்கும் காத்துக்கொண்டுள்ளனர் எனக்கூறும் கேத் ஸ்கார்த், எந்த அளவுக்கு இதுபோன்ற மீள்குடியமர்த்தல் நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா செய்கிறதோ அந்தளவுக்கு அது சிறந்ததாக அமையும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அவுஸ்திரேலியாவில் 12,000 சிரிய மற்றும் ஈராக் அகதிகள்! -
Reviewed by Author
on
January 02, 2020
Rating:

No comments:
Post a Comment