கொடூரமாக கொல்லப்பட்ட 16 பேர் -மெக்சிகோ
போதை மருந்து தொடர்பான குற்றங்களால் சிறை வாசம் அனுபவிக்கும் இவர்கள் சம்பவத்தன்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தயார் நிலையிலேயே இருந்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மெக்சிகோவின் Cieneguillas சிறைச்சாலையில் கால்பந்து போட்டியானது நடத்தப்பட்டது.
இதில் இருவேறு போதை மருந்து கும்பலுக்கு இடையே குறித்த போட்டி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
போட்டியின் இடையே கலவரத்தில் ஈடுபட்டு, அதன்மூலம் ஒரு கும்பல் தப்ப திட்டமிட்டுள்ளது.
கலவர தடுப்பு பொலிசாரால் சுமார் இரண்டு மணி நேரம் முயன்று, இறுதியில் கலவரத்தை ஒடுக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து சிறைச்சாலைக்கு ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் மருத்துவர்களும் விரைந்துள்ளனர்.
இதில் 15 கைதிகள் காயங்களுடன் இறந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் 16 வது கைதி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வழியில் மரணமடைந்துள்ளார்.
கலவரத்தை அடுத்து கைதிகளிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கொடூரமாக கொல்லப்பட்ட 16 பேர் -மெக்சிகோ
Reviewed by Author
on
January 02, 2020
Rating:
No comments:
Post a Comment