17 வயதில் கின்னஸ் சாதனை படைத்த மாணவி! -
குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி நிலன்ஷி படேல் என்பவரே தனது தலைமுடியை நீளமாக வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நிலன்ஷி இளைஞர் பிரிவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னர், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஏபிரில் 152.5 சென்டி மீற்றர் முடி வளர்த்து சாதனை படைத்தார். பிறகு அந்த சாதனையை கெயிட்டோ என்ற பெண் 155.5 சென்டி மீற்றர் நீள தலைமுடி வளர்த்து முறியடித்தார். இந்த 2 சாதனைகளையும் 2018-ல் நிலன்ஷி முறியடித்தார்.
2018-ல் நிலன்ஷியின் முடி 170 செ.மீற்றர் இருந்த நிலையில் கின்னஸில் இடம் பிடித்தார். தற்போது 190 சென்டி மீற்றர் உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளார். நிலன்ஷி 190 சென்டி மீற்றர் வரை தலைமுடி வளர்த்து தனது சாதனையை அவரே முறியதுடித்துள்ளார்.
17 வயதில் கின்னஸ் சாதனை படைத்த மாணவி! -
Reviewed by Author
on
January 17, 2020
Rating:

No comments:
Post a Comment