மன்னார் கட்டை அடம்பன் பகுதியில் விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு-படங்கள்
மன்னார் கட்டை அடம்பன் பகுதியில் சிறிய வான் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச்சம்பவம் 30/01/2020 அன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கட்டை அடம்பன் கிராமத்தைச் சேர்ந்த கனகரத்தினம் எல்வின்ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் மன்/கட்டை அடம்பன் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார்.
இவர் இன்று பாடசாலையில் நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிக்கான கடந்த இரண்டு நாட்களாக மும்முரமாக அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்ததாக பாடசாலை அதிபர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் விமர்சையாக நடைபெறவிருந்த பாடசாலை விளையாட்டுப்போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை குறித்த இளைஞரின் மரணம் அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் கட்டை அடம்பன் பகுதியில் விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு-படங்கள்
Reviewed by Author
on
January 31, 2020
Rating:

No comments:
Post a Comment