உலகின் உயரமான கட்டிடம் மின்னல் தாக்கியது
ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் அமைந்துள்ளது உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா.
கடந்த சில நாட்களாக துபாய் உள்ளிட்ட ஐக்கிய அமீரகத்தின் சில பகுதிகளில் பேய் மழை பெய்து வருகிறது.
பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அங்குள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளியன்று மாலை வேளையில், புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் மின்னல் தாக்கியுள்ள புகைப்படம் ஒன்றை இளவரசர் ஷேக் ஹம்தான் பதிவு செய்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த புகைப்படமானது அமீரக மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் தொடர்ந்து பல ஆயிரம் பேரால் பகிரப்பட்டும் வருகிறது.
உலகின் உயரமான கட்டிடம் மின்னல் தாக்கியது
Reviewed by Author
on
January 12, 2020
Rating:
No comments:
Post a Comment