உங்க உடம்பில் ஆங்காங்கே மரு அசிங்கமாக உள்ளதா....
இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.
பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும்.
இருப்பினும் இந்த மருக்களை ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு எளிதில் உதிர செய்யலாம்.
அந்தவகையில் தற்போது மருக்களைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

- இஞ்சியைத் துருவியோ இடித்தோ அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாறை அவ்வப்போது மருக்கள் உள்ள இடத்தில் வைத்து வாருங்கள்.
- அன்னாசி பழத்தின் சாறினை எடுத்து மருக்கள் மீது வைத்திருந்தாலும் மருக்கள் உதிர ஆரம்பிக்கும்.
- சின்ன வெங்காயத்தினை அரைத்தோ அல்லது இடித்தோ சாறெடுத்து அந்த சாறினை மருக்கள் மீது வையுங்கள். முதல் முறை சந்று எரிச்சலாக இருப்பது போல இருக்கும். ஆனால் விரைவிலேயே மரு உதிர்ந்து விடும்.
- தினமும் காலையும் மாலையும் ஆப்பிள் சீடர் வினிகர் சில துளிகள் மருக்கள் மேல் வைத்து வந்தால் மரு உதிர்ந்து இருந்த இடம் தெரியாமல் ஆகிவிடும்.
- டீ ட்ரீஎசன்ஷியல் ஆயிலைப் பயன்படுத்தலாம். குளிர்ச்சியாகத் தான் இருக்கும். மரு இருந்த தழும்பு கூட தெரியாமல் உதிர்ந்து விடும்.
- மரு உள்ள இடத்தில் அடிக்கடி எலுமிச்சை சாறினை அப்ளை செய்து வந்தால் மிக வேகமாக மரு உதிர்ந்து விடும்.
- பூண்டு முதல்முறை பயன்படுத்தும்போது கொஞ்சம் எரிச்சல் இருக்கத்தான் செய்யும். ஆனால் மிக வேகமாக மருவை உதிரச் செய்துவிடும்.
- மரு உள்ள இடத்தில் இந்த ஜெல்லை அப்ளை செய்யலாம். வலியோ எரிச்சலோ இல்லாமல் மரு உதிரும்.
உங்க உடம்பில் ஆங்காங்கே மரு அசிங்கமாக உள்ளதா....
Reviewed by Author
on
January 12, 2020
Rating:
No comments:
Post a Comment