கன்னியாகுமரியில் கால் பதித்த நாம் தமிழர் - முதல் வெற்றி
"கன்னியாகுமரி மாவட்டத்தின் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரண்டு கட்சிகளையும் தவிர்த்து அமமுக பல இடங்களில் வென்றுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி தனது வெற்றியை எங்கும் பதிவு செய்யமால் இருந்தது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11ஆம் எண் வார்டு உறுப்பினராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுனில் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் ஊராட்சித் தேர்தலில் முதல் வெற்றியை பெற்று நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரியில் கால் பதித்துள்ளது.
கன்னியாகுமரியில் கால் பதித்த நாம் தமிழர் - முதல் வெற்றி
Reviewed by Author
on
January 03, 2020
Rating:

No comments:
Post a Comment