அண்மைய செய்திகள்

recent
-

மன்.சிலாவத்துறை முஸ்லிம் வித்தியாலய மாணவி M.M.பாத்திமா றிபாதா சாதனை

2019ம் ஆண்டிற்கான  க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்.சிலாவத்துறை முஸ்லிம் பாடசாலையின் மாணவி  கலைப்பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முத்து முகம்மது - சம்சுன் பீவி தம்பதியரின் புதல்வி  M.M. பாத்திமா றிபாதா மாணவி  1ம் இடம்பெற்று சாதனைபுரிந்துள்ளார். .

மன்.சிலாவத்துறை முஸ்லிம் வித்தியாலய மாணவி முத்து முகம்மது பாத்திமா றிபாதா கலைப்பிரிவில் 3A தரச்சித்தி பெற்று சட்ட பீடம் தெரிவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

தங்களின் எதிர்கால இலக்கு எனவினவியபோது

தனது இலக்கை நோக்கிய பயணப்பாதை சரியாக அமைந்துள்ளதென பெறுபேறு குறித்து மாணவி கருத்துத் தெரிவித்தார்.
வறுமையின் பிடியில் சிக்குண்டிருந்த போதிலும் வறுமையானது கல்விக்கு ஒரு தடையே அல்ல என்பதை தான் நிரூபிக்க எண்ணியதாக M.M. பாத்திமா றிபாதா மேலும் சட்டத்தரணியாகி சமூகத்தில் நலிவுற்றோருக்கு சேவையாற்றுவதே தனது பணியாக இருக்குமென்றும் தெரிவித்தார்.


நான் இந்நிலைக்கு வரக்காரணமாய் இருந்த ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த  நன்றிகள்

எல்லாவற்றுக்கும் மேலாக  எல்லாம் வல்ல அல்லாவின் நாட்டமே.

கல்லூரி முதல்வர் தனது கருத்தில்
க.பொ.த உயர்தர பிரிவு தொடங்கி 03ம் வருடத்தில் இது தான் முதல் நிலை பெற்றுள்ளது மகிழ்ச்சி இனிவரும் காலங்களில் இன்னும் திறமையான மாணவர்களை உருவாக்குவதே எமது பாடசாலையின் நோக்கம்.

இம் மாணவிக்கும் கல்லூரிச்சமூகத்திற்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.




தொகுப்பு.வை.கஜேந்திரன்,BA





மன்.சிலாவத்துறை முஸ்லிம் வித்தியாலய மாணவி M.M.பாத்திமா றிபாதா சாதனை Reviewed by Author on January 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.