தீர்வைவிட அபிவிருத்திதான் தமிழ் மக்களுக்கு அவசியம்!- சம்பந்தனுக்கு மஹிந்த பதில் -
அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தப்புக்கணக்குப் போடக்கூடாது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அபிவிருத்திதான் மிகவும் அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும்.
அப்போதுதான் சர்வதேச முதலீடுகள், அபிவிருத்திகள் என அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வுக்கான எமது பணிகள் ஆரம்பமாகும். மூவின மக்களுக்கும் சம உரிமையுடனான தீர்வை நாம் பெற்றுக்கொடுப்போம். அந்தத் தீர்வு சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வாக இருக்கும்.
ஏனெனில் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி - ரணில் தலைமையில் தலைவிரித்தாடிய ஊழல், மோசடி ஆட்சியை மாற்றியமைத்ததில் சிங்கள மக்களுக்குப் பெரும் பங்குண்டு.
அதற்காக தமிழ், முஸ்லிம் மக்களை நாம் புறக்கணிக்கமாட்டோம். அவர்களையும் அரவணைத்துக்கொண்டு சிங்கள மக்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வை நாம் பெற்றுக்கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
தீர்வைவிட அபிவிருத்திதான் தமிழ் மக்களுக்கு அவசியம்!- சம்பந்தனுக்கு மஹிந்த பதில் -
Reviewed by Author
on
January 10, 2020
Rating:
Reviewed by Author
on
January 10, 2020
Rating:


No comments:
Post a Comment