மன்னாரில் ஓவியக்கழகமும் ஓவியக்கலைக்கூடமும் உருவாக்கப்பட வேண்டும்-ஓவிய நுண்கலைமாணி பா.மேரி நிரூபா,BFA
கலைஞனின் அகம் கணணியில் முகம் விம்பம் பகுதியில்; சமூக தமிழ் மறை தன்னார்வப்பணியாளரும் ஓவியருமாகிய நுண்கலைமாணி செல்வி பாவிலு மேரி நிரூபா B.FA அவர்களின் அகத்திலிருந்து….
தங்களைப்பற்றி-
நான் புதுக்கமம் உயிலங்குளம் மன்னாரில் எனது தந்தை ஒய்வு பெற்ற கிராம அலுவலர் திரு.அந்தோனி பாவிலு தாய் கிறிஸ்ரி மேரி ஜெயந்தி எனது சகோதரர் உறவுகளுடன் மறை கலைச்சமூகப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.
தங்களது கல்விக்காலம் பற்றி
எனது ஆரம்பக்கல்வியை மன்.நாவற்குளம் றோ.க.த.க பாடசாலையிலும் மன்.புதுக்கமம் அ.த.க.பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை மன்.நானாட்டான் ம.வித்தியாலயத்திலும் தொடர்ந்து இடைநிலைமற்றும் உயர்நிலைக்கல்வியை வ.இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயத்திலும் கற்று உயர்தரத்தில் சித்திரப்பாடத்தினை பிரதான பாடமாக தேர்வு செய்து சித்தியடைந்து மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி நுண்கலைத்துறையில் கட்புலமும் தொழிநுட்பவியலும் சிறப்பு படிப்பை முடித்து நுண்கலைமாணி பட்டதாரியாக (BACHELOR OF FINE ARTS IN VISUAL TECHNOLOGCAL ARTS)ஓவியத்துறையில் மிளிர்ந்து கொண்டு இருக்கின்றேன்.
ஓவியம் வரையும் எண்ணம் எவ்வாறு உருவானது
எனக்கு 03 வயதில் இருந்தே வரைந்து காட்டி ஓவியத்தின் ஆர்வத்தினைஏற்படுத்திய மருத்தவர் DR.செ.அல்மேடா BSC-BSMS, DMO பொதுவைத்திய சாலை ஆரையம்பதி மட்டக்களப்பு மற்றும் திருமதி ஜான்சி திருமதி றீற்றா சீமான் திரு.ரவிசங்கர் திரு.யஸ்ரின் பால்தாஸ் BFA,MA,PGDE,SLES சிறப்பாக ஓவியத்தினைதுறையாக தெரிவுசெய்யகாரணமாணவர். அவர்களையும் எனது ஓவியவிருப்ப கர்த்தாக்கள் பள்ளிக்காலங்களில் வரைந்திருக்கின்றேன்.அப்பப்போது வரைந்து வந்தேன் எனக்கு மிகவும் பிடித்துப்போனால் அவற்றினை கீறியவற்றை பத்திரமாக சேர்த்துவைத்தேன் தொடர்ச்சியாக இப்பவரைக்கும்.
பெண் ஓவியப்படைப்பாளியாக சமூகத்திற்கு சொல்ல நினைப்பது….
சமூகத்திற்கும் குறிப்பாக பெண்களுக்கும் நான்சொல்ல விரும்புவது ஓவியத்துறை தவிர்ந்து வேறு எந்த துறையானாலும்சரி பெண்கள் சாதிப்பதை விடவே கூடாது ஆனாலும் பெண்கள் தமது சுயகௌரவத்தினையும் மரியாதையினையும் எப்பவும் இழக்ககூடாது. தன்னைவளப்படுத்திக்கொண்டு சமூகத்தில் சேவையாற்றுதல் உண்மையில் சிறந்த திறமைதான்….
பெண்படைப்பாளியாக இளையோருக்குதங்களின் கருத்து....
எந்தத்துறையானாலும் சரி அந்நதந்ததறையில் எமது திறமையை வெளிப்படுத்தி சாதிக்க வேண்டும் அதிலும் குறிப்பாக ஓவியத்துறையில் இருப்பவர்கள் வரைவது போலவே செயலிலும் இருக்க வேண்டும் அதுதான் மிகவும் சிறப்பானதொரு விடையமாகும்.
தங்களின் கலைப்பயணத்தில் மறக்க முடியாதவர்கள் பற்றி…
எனது வாழ்விலும் கலைப்பயணத்திலும் உறுதுணையாக இருந்தவர்கள் முதலில் பெற்றோர்கள் எனது ஆசிரியர்கள் பேராசிரியர் சி.மௌனகுரு ,பேராசிரியர் கிறிஸ்ணராஜா மற்றும் மருத்தவர் DR.செ.அல்மேடா BSC-BSMS DMO பொதுவைத்திய சாலை ஆரையம்பதி மட்டக்களப்பு மற்றும் திருமதி ஜான்சி திருமதி றீற்றா சீமான் திரு.ரவிசங்கர் திரு.ச.யஸ்ரின் பால்தாஸ் BFA-MA-PGDE-SLES பல்கலைக்கழகத்தில் திரு.கோகுல ரமணன் திருமதி.றினுஜா திருமதி.ஆனந்தி திரு.சஞ்சித் திரு.சசிக்குமார் விரிவுரையாளர்களையம்
சிரேஷ்டவிரிவுரையாளர்களான திரு.பிரகாஸ் BFA-MA திரு.S.சிவரெட்ணம் BFA-MA திரு.DR.S..ஜெயசங்கர் BFA-MA M.PHIL
இலங்கை ஓவியர்களும் விரிவுரயாளர்களுமாகிய
திரு.DR.தேசவர B.FA,MFA
திரு.U.புஸ்பகாந்தன் B.FA
திரு.S.நிர்மலவாசன் Dip M.tech
திரு.அனுஷகயவீர B.FA
திரு.ச.பிரதீப்குமாரதுங்க B.FA
திருமதி.கமலவாசுகி ஜெயசங்கர் BSC இவர்களுடன் எல்லாவற்றுக்கும் மேலாக எனது ஓவியத்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனது பிரியமான தோழி த.வினோஜா B.FA உதவி விரிவுரையாளர் ஓவியர் மற்றும் எல்லா வழியிலும் நண்பனாக சகோதரனாக வழிகாட்டியாக திகழும் ஆசிரியர் திரு.சி.பற்மராஜன்B.FA அவர்களையும் அதேபோல் ஓவியத்துறையில் சிற்ப்பாகசெயற்பட வழிகாட்டும் பாடசாலைக்கால சிரேஷ்ர மாணவி சகோதரி கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.அபிராமி கவிராஜ்(B.FA) எனது நண்பர்கள் இன்னும் பலர் இவர்களை நான் என்றும் மறந்துவிட முடியாது அத்துடன் எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டிக்கொள்கின்றேன்.
தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத விடையம் பற்றி…
நிறைய இருந்தாலும் மன்னார் மாவட்டத்தின் தொன்மையும் வரலாற்றினையும் சொல்லலக்கூடிய பல சான்றுப்பொக்கிஷங்கள் உள்ளன அவற்றில் மன்னார் மாவட்டத்திற்கும் கிறிஸ்த்தவ சமூகத்திற்கும் உரிய தொன்மையான வரலாற்று சான்றான வியாகுல மாதா பிரசங்கத்திற்குரிய ஒன்பது ஓவியங்கள் பறப்பான்கண்டல் பெரியகோயிலில் இன்று வரை காணப்பட்டாலும் அவ்வாறான வரலாற்றுப்பொக்கிஷம் இருப்பது எமது மன்னார் மக்களுக்கே தெரியாமல் இருப்பதுதான் கவலைக்குரிய விடையம்.
இலைமறை காயாக இருந்த ஓவியங்களை எனது பெரியப்பா அமரர் யக்கோபுசேரம் அவர்களின் மூலம் தெளிவாக தெரிந்துகொண்டு எனது பட்டப்படிப்பின் இறுதியாண்டு ஆய்வுக்காக அவ் ஓவியங்களை புகைப்படங்களாக ப்ரேம் போட்டும் ஆய்வக்கட்டுரையாகவும் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழத்தில் நுண்கலைப்பீட ஓவியக்கூடத்தில் காண்பியக்கலை காட்சியாக காட்சிப்படுத்தியதன் மூலம் எமது மாவட்டத்தின் தொன்மை பலருக்கு தெரியவந்ததும் பலரதுபாராட்டினையம் பெற்றது.
அவ்வாய்வின் ஒருபிரதியை எனது பெரியப்பா யக்கோபுசேரம் அவர்களின் கையில் கொடுத்துஅவரிடம் ஆசிரும் பாராட்டும் பெற்றுக்கொண்டது கலைப்பயணத்தில் மறக்கமுடியாதவிடையம் அவரின் நீண்ட நாள்ஆசையான அந்த ஒன்பது ஓவியங்களைபெரியளவில் வரைந்து ஓவியத்திற்குவர்ணம் தீட்டிகாட்சிப்படுத்த வேண்டும் என்றார் அதைத்தான் நான் தற்போது செய்துகொண்டு வருகின்றேன்.
தங்களின் சேவைகளுக்கு பாராட்டி கௌரவித்த விருதுகள் பரிசுகள் பற்றி---
- வடமாகாண கலைமனறங்களுக்கிடயிலான கலை ஆக்கத்திறன் போட்டி-ஓவியம் 2ம் இடம் 29-09-2018
- வடமாகாண கலைமனறங்களுக்கிடயிலான கலை ஆக்கத்திறன் போட்டி-ஓவியம் 3ம் இடம் 11-10-2019
- தேசிய சமாதனா பேரவையின் புராதான மன்னாரை வெளிக்கொணர்வோம் புகைப்படகண்காடசியி பாhட்டு சான்றிதழ் 29-09-2018
- தேசிய இலக்கியவிழா மன்னார் பிரதேசமட்டம் அற்றைத்திங்கள் ஓர் கண்ணோட்ட பார்வை இலக்கிய விமர்சனம் 03ம் இடம் 12-07-2018; இத்துடன் பாடசாலை மட்டம் பிரதேசமட்டம் மாவட்டமட்டங்களிலும் இளஞர்சேவைகள் மன்றம் ஏனைய மன்றங்களினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்கு பற்றி பல பரிசுகளையும் சான்றிதழ்களயும் பெற்றுள்ளேன்.
தாங்கள் பணியாற்றும் அமைப்புக்கள் பற்றி---
- மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகம் BACHELOR OF FINE ARTS INVISUAL TECHNOLOGCAL ARTS நுண்கலைத்துறையில் கட்புலமும் தொழிநுட்பவியலும் சிறப்பு படிப்பை முடித்து ஓவியத்துறையில நுண்கலைமாணி பட்டதாரியாகவுள்ளேன். 03-08-2017
- தலைமைத்துவத்திற்கான வர்ணச்சான்றிதழ் பெற்றுள்ளேன்
- தலைவர்-புனித சூசையப்பர் வழிபாட்டுக்குழு புதுக்கமம்
- உபதலைவர்- புனித யோசப் இளைஞர் கழகம் புதுக்கமம் மன்னார்.
- செயலாளர் -பிரதேச இளைஞர் சம்மேளனம் மாவட்ட இளைஞர் சம்மேளனம் கலாச்சார பிரிவு
- உறுப்பினர்-புனித சூசையப்பர் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம்
- உறுப்பினர் -மற்றும் பொருலாளர்; மன்னார் நகர பிரதேச செயலக கலாச்சாரப்பேரவை
- உறுப்பினர்-தமிழமுது நண்பர்கள் வட்டம் மன்னார்.
- உறுப்பினர்-செஞ்சிலுவை சங்கம் மன்னார் கிளை
- VALUES 4ALL-பயிற்றுவிப்பு பயிற்சியாளர்
ஓவியத்துறையில் இதுவரை நீங்கள்….
நல்ல கேள்வி இது நான் இதுவரை சுமார் 1000 ஓவியங்களை வரைந்திருப்பேன் பல ஓவியங்கள் தற்போது என் கைவசம் இல்லை இருந்தாலும் பல
- எண்ணெய்வர்ண ஓவியங்கள்-36
நீர் வர்ணஓவியங்கள்-60
பஸ்ரல்வர்ண ஓவ்யங்கள்-20
பென்சில் ஓவியங்கள்-40
பேனா ஓவியங்கள்-25
- 2016ம் ஆண்டு சமகால ஓவியங்கள் என்றதலைப்பில் காரைதீவு சுவாமி விபுலானந்தர் மணிமண்டபத்திலும்.
- 2016ம் ஆண்டு PRINTMAKING ART கண்காட்சியையும்
- 2017ம் ஆண்டு சமகால ஓவியங்களில் HOSTEL LIFE என்ற தலைப்பில் ஓவியக்கண்காட்சியையும் மட்டக்களப்பு நுண்கலைத்துறை ஓவியக்கூடத்தில் காண்பியக்கலை கண்காட்சியையும்.
- 2017ம் ஆண்டு மன்னார் பறப்பாங்கண்டல் வியாகுலமாதா பிரசங்க ஆய்வு செய்த ஓவியங்களை காண்பியக்கலை ஓவியக்கூடத்திலும்.
- 2017ம் ஆண்டு வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர் குழுவுடன் இணைந்து காண்பியக்கலைக்கண்காடசியை மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஆலய மண்டபத்திலும்.
- 2018ம் ஆண்டு மன்.சவேரியார் ஆண்கள் தேசியபாடசாலை மண்டபத்தில் கருத்துவெளிப்பாட்டு ஓவியத்தினையும்.
- 2019ம் ஆண்டு யாழ்பல்கலக்கழக நுண்கலைப்பீட ஓவியக்கூடத்தில் வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர் குழுவுடன் இணைந்து காண்பியக்கலைக்கண்காடசியையும் நடாத்தியுள்ளேன்.
மன்னாரில் இதுவரை ஓவியக்கண்காட்சியினை வைகடகவில்லையா….
பல தடவைமுயற்சி செய்தும் தடங்களாகவே இருக்கின்றது மிகவிரைவில் எனது மண்ணில் எனது ஓவியங்களை காட்சிப்படுத்த வேண்டும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றேன்.
ஓவியத்துறை தவிர்ந்து வேறு கலைகளில்
கவிதை,பாடல்,நாடகம்,கைவினை,திறனாய்வு ,விளையாட்டு தலைமைத்துவம் போன்றவற்றில் எனது திறமையைவெளிப்படுத்தி சான்றிதழ்கள் பரிசுகள் பெற்றுள்ளேன் எனது பிரதான துறையாகவும் எனது அடையாளமாகவும் இருப்பது ஓவியத்துறையே….
மன்னார் மாவட்டமானது ஓவியத்துறையில் எந்த நிலையில்..
மன்னார் மாவட்டமானது ஓவியத்துறையில் இன்னும் அடிப்படையில் தான் உள்ளது காரணம் ஓவியத்துறை சார்ந்து மாணவர்களுக்கும் சில கலைஞர்களுக்கும்தெளிவின்மையும் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஓவியர்கள் ஒன்றிணைந்து ஓவியக்கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும் அத்துடன் ஓவியக்கலைக்கூடத்தினையும் உருவாக்கி எமது ஓவியங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் திறமையினை வெளிக்கொணர்ந்து ஏனைய மாவட்டங்களோடும் போட்டி போட்டுதேசிய ரீதியில் சாதிக்க பெரும் வாய்ப்பாக அமைவதோடு ஓவியத்துறையினை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லும் எனது ஓவியநண்பர்கள் ஆசிரியர்கள் கலந்துரையாடி வருகின்றேன் மிகவிரைவில் மன்னாரில் ஓவியக்கழகம் மற்றும் ஓவியக்கலைக்கூடத்தினையும் உருவாக்குவோம்.
நுண்கலைத்துறையில் கட்புலமும் தொழிநுட்பவியலும் ஓவியத்துறையில நுண்கலைமாணி பட்டதாரியான தங்களின் கவலைக்கரியவிடையம் …
ஆயக்கலைகள் 64 ஓவியமும் ஒன்று அந்த ஓவியத்துறையானது நுண்கலைமாணியுடன் சரி முதுநுண்கலைமாணி என்பது எமது நாட்டில் எட்டாக்கனியாகவே உள்ளது இதனால் என்னைப்போன்ற ஓவியப்பட்டதாரிகளுக்கு தங்களின் அடுத்த கட்டத்திற்கு மேற்படிப்பு முடியாத நிலை உள்ளது.அதனால் ஓவியத்துறையில் ஆர்வமும் விருப்பமும்குறைந்து வருகின்றது காரணம் வேலையில்லாப்பிரச்சினையும் ஒன்று கலையார்வம் உள்ளவர்களால் தான் ஓவியம் இன்னும்…
ஓவியத்துறையில நுண்கலைமாணி பட்டதாரியான தங்களின் இலக்கு….
எனது இலக்கு என்றால் நான் கற்றுக்கொண்டு ஓவியத்துறையில் என்னைப்போல நுண்கலைமாணி பட்டதாரியாக எமது மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு சிலரையாவது உருவாக்கவேண்டும் என்பதே அதற்காக இலவசமாக ஓவியப்பயிற்சிகளையும் கண்காட்சிகளையும் வழங்கி வருகின்றேன். சிறுவயதில் இருந்தே ஓவியத்தின் மீது ஆர்வத்தினை ஏற்படுத்தி எமது பாரம்பரியத்தினையும் பண்பாண்ட்டிணையும் ஓவியத்தின் மூலம் பேசும்படிசெய்ய வேண்டும்.
மன்னார் மண்ணின் பெருமையை 10 வருடங்கள் கடந்தும் வெளிப்படுதிவரும் நியூமன்னார் இணையம் பற்றி…
நியூமன்னார் இணையம் மன்னாரில் நல்ல செயற்பாடுகளை செய்து வருகின்றது. முதல் தடவையாக நியூமன்னார் இணையத்தில் இருந்து வை.கஜேந்திரனாகிய நீங்கள் செவ்வி கண்டுள்ளீர்கள் இது உண்மையில் அரிய கலைப்பணிதான் எத்தனையோ கலைஞர்கள் இன்னும் மறைவாகவே இருக்கின்றார்கள் அவர்களையும் வெளிக்கொணரவேண்டும் என்னை வெளிப்படுத்திய நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் என்றும்.....
நியூமன்னார் இணையக்குழுமத்திற்காக சந்திப்பு—
கலைச்செம்மல் கவிஞர் வை.கஜேந்திரன்-BA
மன்னாரில் ஓவியக்கழகமும் ஓவியக்கலைக்கூடமும் உருவாக்கப்பட வேண்டும்-ஓவிய நுண்கலைமாணி பா.மேரி நிரூபா,BFA
Reviewed by Author
on
January 27, 2020
Rating:
No comments:
Post a Comment