இலங்கையில் இருந்து இரகசியமாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் -
இலங்கையில் இருந்து கப்பலில் ஏற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான தொல் பொருட்கள் கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஓலேன்டோவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக Live Science இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஓலேன்டோவில் அமைந்துள்ள Ripley’s Believe it or Not என்ற தனியார் நிறுவனம் அதன் அருங்காட்சியகம் தொல் பொருட்கள் தொடர்பாக பிரசித்தமான நிறுவனமாகும்.
இலங்கையில் இருந்து கப்பலில் ஏற்றப்பட்ட தொல் பொருட்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி மியாமி துறைமுகத்தின் ஊடாக குறித்த நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.
அந்த தொல் பொருட்களில் 125 பொருட்கள் பட்டியலிடப்பட்டிருந்ததுடன் அவை மூன்று கொள்கலன்களில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன. மொத்தமாக 19 ஆயிரத்து 575 கிலோ கிராம் அமெரிக்காவுக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கப்பலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொல் பொருட்களின் பெறுமதியை கப்பல் நிறுவனம் வெளியிடவில்லை.
கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை போர் நடைபெற்ற காலத்தில் வடக்கு, கிழக்கில் சேகரிக்கப்பட்ட தொல் பொருட்கள் இவ்வாறு இரகசியமாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக Live Science இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் இருந்து இரகசியமாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் -
Reviewed by Author
on
January 18, 2020
Rating:

No comments:
Post a Comment