நானாட்டன் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு கடன் திட்டம் வழங்கி வைப்பு-படம்
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்பு கடன் திட்டம் வழங்கும் நிகழ்வு இன்று 06-02-2020 வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது.
நானாட்டான் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி றஞ்சனா இருதயராஜ் குரூஸ் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் கலந்து கொண்டு குறித்த கடன் திட்டத்தை வழங்கி வைத்தார்.
-நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் பெண் தலைமைத்துவ பயனாளிகளுக்கான நுண்கடன் வழங்கும் நிகழ்வின் போது பெண் தலைமைத்து குடும்பங்கள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர்களின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்தும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
பின்னர் குறித்த நுண் கடன் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தகுதியான 10 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் தொழில் முயற்சிக் கடன் வழங்கப்பட்டது.
குறித்த நுண் கடன் திட்டத்தை நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நானாட்டான் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி றஞ்சனா இருதயராஜ் குரூஸ் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் கலந்து கொண்டு குறித்த கடன் திட்டத்தை வழங்கி வைத்தார்.
-நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் பெண் தலைமைத்துவ பயனாளிகளுக்கான நுண்கடன் வழங்கும் நிகழ்வின் போது பெண் தலைமைத்து குடும்பங்கள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர்களின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்தும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
பின்னர் குறித்த நுண் கடன் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தகுதியான 10 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் தொழில் முயற்சிக் கடன் வழங்கப்பட்டது.
குறித்த நுண் கடன் திட்டத்தை நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நானாட்டன் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு கடன் திட்டம் வழங்கி வைப்பு-படம்
Reviewed by Author
on
February 07, 2020
Rating:

No comments:
Post a Comment