ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா -
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் 22 முகங்கள் நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.
வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் நேற்று தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு பெற்ற பீடாதிபதி க.சுவர்ணராஜா தலைமையில் இவ்விழா இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பல்வேறு துறைசார்ந்த 22 கலைஞர்களை பறைசாற்றும் நேர்காணல் தொகுப்புக்கள் குறித்த நூலில் அடங்கியுள்ளது.
நூல் வெளியீட்டின் முதல் பிரதி பிரதம விருந்தினர்களால் நூலாசிரியர் நவரத்தினம் கபிலநாத்தின் தந்தை செ.நவரத்தினத்திற்கு வழங்கி வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக ஆய்வாளரும் மூத்த ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரையும், சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஸ்ரீகஜனும், கௌரவ விருந்தினர்களாக வர்த்தகர் ச.இராசலிங்கம், மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்ற செயலாளர் செ.சபாநாதன் ஆகியோர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா -
Reviewed by Author
on
February 03, 2020
Rating:

No comments:
Post a Comment