27 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது -
பங்களாதேஷ் கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஹிக்கடுவ, பெரேலிய உள்ளிட்ட சில பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ் பாதுகாப்புப் பிரிவினரால் மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மீனவர்களை விடுதலை செய்து மீண்டும் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்களின் உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் பத்மப்ரிய திசேரா தெரிவித்துள்ளார்.
27 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது -
Reviewed by Author
on
February 22, 2020
Rating:

No comments:
Post a Comment