மரண தேசத்திற்குள் புகுந்து 33 பேரை காப்பாற்றிய இலங்கை குழு! நாட்டில் குவியும் பாராட்டு -
சீனாவில் மிகவும் ஆபத்தான பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வுஹான் பிராந்தியத்திலிருந்து இலங்கை மாணவர்களை காப்பாற்றிய குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வுஹான் பிராந்தியம் சீனாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தமது உயிரை பணயம் வைத்து குறித்த பகுதிக்குள் சென்று இலங்கை மாணவர்கள் 33 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
தன்னார்வமாக முன்வந்து இந்த பணியினை முன்னெடுத்து விமானிகள் தலைமையிலான குழுவினருக்கு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பாராட்டு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய குறித்த மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான US 1423 என்ற விமானம் கொழும்பில் இருந்து வுஹான் நோக்கி சென்று அங்கிருந்த மாணவர்களை ஏற்றியுள்ளது. குறித்த விமானம் அங்கிருந்து புறப்பட்ட விமானம், மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
33 மாணவர்களும் தீவிர சோதனையின் பின்னர் தியத்தலாவ இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு அங்கு தங்க வைக்கப்பட்டு கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்பது தொடர்பில் கண்டறியப்படவுள்ளது.
இதேவேளை சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். 13781 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் பலர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மரண தேசத்திற்குள் புகுந்து 33 பேரை காப்பாற்றிய இலங்கை குழு! நாட்டில் குவியும் பாராட்டு -
Reviewed by Author
on
February 02, 2020
Rating:

No comments:
Post a Comment