சைவர்கள் மீதான அட்டூழியங்களை நிறுத்துங்கள்: யாழ் ஆயர் இல்லம் முன்பாக மறவன்புலவு உண்ணாவிரதம்!
யாழ்ப்பாண நாளிதழான வலம்புரி இதழ் அலுவலகம் மீது நேற்று வியாழன் மாலை தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தமைக்கு எதிராக ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஊர்காவற்றுறையில் சைவத் தெருப்பெயர்களைக் கிறித்தவப் பெயர்களாக மாற்ற முனைகிறார்கள் எனச் செய்தி வெளியிட்டதற்காகத் தாக்க முயற்சிகள் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பி;ன்னணியிலுள்ள கத்தோலிக்க மதகுருமார் வலம்புரி ஆசிரிய பீடத்திடம் மன்னிப்பு கோர வலியுறுத்தியே யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக இன்று காலை முதல் அவரது உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற இயேசு பெருமானின் வரிகளை மறந்து வன்முறையில் ஈடுபடுகின்ற போர்த்துக்கேயரின் அடிவருடிகளை வன்மையாக கண்டிக்கிறேன். வலம்புரி இதழில் கைவைத்தால் சைவத் தமிழ் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
வன்முறையைத் கண்டித்து,ஊடக சுதந்திரத்தை ஆதரித்து, சைவத் தமிழ் பண்புகளைக் காக்க இன்று வெள்ளி காலை தொடக்கம் யாழ்ப்பாணம் கண்டி வீதி சுண்டிக்குளி ஆயர் இல்லத்துக்கு முன்பாக அடையாள உண்ணா நோன்பை தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
சைவர்கள் மீதான அட்டூழியங்களை நிறுத்துங்கள்: யாழ் ஆயர் இல்லம் முன்பாக மறவன்புலவு உண்ணாவிரதம்!
Reviewed by Admin
on
February 21, 2020
Rating:

No comments:
Post a Comment